அருள்மிகு ஜ்வரஹரேஸ்வரர் திருக்கோவில் (மேலப்பாதி)
God Name : மூலவர்: ஜ்வரஹரேஸ்வரர்.
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
ஜ்வரஹரேஸ்வரர்
சிவபெருமானின் 64 வகை வடிவங்களுள், ஜ்வரஹரேஸ்வரர் திருமேனியும் ஒன்று. பொதுவாக சிவன் கோவில்களில் உட்பிரகாரத்தில் இடப்பக்கம், சப்த மாதர்களை அடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். சில கோவில்களில் தனி சந்நிதி இருக்கும். ஆனால் இக்கோவிலில் மூலவரே ஜ்வரஹரேஸ்வரர்தான்.
இவர் மூன்று தலைகள், நான்கு கரங்கள், மூன்று பாதங்கள் கொண்டு காட்சி தருவார். பின்னிரு கரங்களில் அக்னியும் உடுக்கையும் இருக்கும். முன்னிரு கரங்களில் போரிடும் கோலத்தில் சூலத்தை ஏந்தி இருப்பார். மூன்று கால்களில் இரண்டு சமநிலையாக இருக்க, மூன்றாவது சற்று தூக்கிய நிலையில் இருக்கும். ஒரு சில சிலைகளில் நான்கு கரங்களில் திரிசூலம், மான், மலர், மணி போன்றவற்றை வைத்திருப்பார்.
ஸ்தல வரலாறு
தினகர முனிவரின் பராமரிப்பில் இருந்த மான் ஒன்றை அம்பு எய்து கொன்றுவிட்டான் சோழ மன்னன். அந்த மான் பூமியில் சாயும்போது போட்ட தீனசுரமான குரல் முனிவரின் காதில் விழுந்தது. வருத்தம் கொண்ட முனிவர், மானைக் கொன்றவன் ஜ்வரம் பிடித்து அலையக் கடவது என சபித்து விட்டார்.
க்ஷேத்ராடனம் போய்க் கொண்டிருந்த சோழ மன்னன் இத்தலமருகே வரும்போது நோய்வாய்ப்பட்டு அவதியுற்றான்.
பின்னர் இவ்விறைவனை வழிபட்டு நலம் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இன்றும், கடும் காய்ச்சல் கொண்டவர்கள், இவருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து, நோய் நீங்கப் பெறுகின்றனர். மிளகு ரசம் நைவேத்தியம் செய்கின்றனர்.
மூலவர்: ஜ்வரஹரேஸ்வரர், அம்பாள்: அழகம்மை.
மூலஸ்தானத்தில் ஜ்வரஹரேஸ்வரர் மூலவராக எழுந்தருளியிருப்பது விசேஷம். சூரியஒளி படர்ந்திருக்கும்படியாக கருவறை அமைக்கப்பட்டுள்ளது. தனி சந்நிதியில் அம்பாள் அழகம்மை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். ஏழரை அடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன், பெயருக்கேற்ப அழகம்மையாக திகழ்கின்றாள்.
ஒவ்வொரு தேவ கோஷ்டமும் அழகிய மகர தோரணங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள சோழர் காலத்து கோவில் இது.
அழகிய கல்தூண்கள், மேற்கூரையிலுள்ள சிற்பங்கள் வியக்க வைக்கின்றன. லிங்கோத்பவருக்கு பதிலாக சங்கர நாராயணர் காட்சி தருகின்றார். பிரம்ம சண்டிகேசர் நான்கு முகங்கள், நான்கு கரங்கள் கொண்டு தரிசனம் தருகின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.