திருவாவடுதுறை ஆதீன மடாலயம் (திருவாவடுதுறை)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

சைவம், தமிழ் - இரண்டையுமே வளர்த்த பெருமையுடையது திருவாவடுதுறை ஆதீனம். திருக்கயிலாயப் பரம்பரையில் வந்த நமசிவாய தேசிகர் இந்த மடத்தைத் தோற்றுவித்தார். மூவலூரைச் சேர்ந்த சைவ வேளாளத் தம்பதியினர் தமது குலம் தழைக்க ஒரு குழந்தை வேண்டுமென வைத்தீஸ்வரன் கோயில் சென்று வைத்தீஸ்வரனையும், தையல்நாயகியையும் பிரார்த்தித்து வேண்டியதன் பலனாக ஓர் ஆண் குழந்தையைப் பெற்றனர். வைத்தியநாதன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். சிறுவனான வைத்யநாதனுக்கு, அர்ச்சகர் வடிவில் பிரத்யட்சமான சிவபெருமான், அவனை உற்று நோக்கி நயனதீட்சை செய்வித்தார் என்றும், ஒரு லிங்கத்தைத் தந்தருளினார் என்றும் கூறுவர். சைவ சித்தாந்த மரபில் வந்த திருஅருள் நமசிவாயரின் சீடரான சித்தர் சிவபிரகாசர், வைத்யநாதனுக்கு ஞான மார்க்கத்தைப் போதித்து ஸ்ரீ நமசிவாயர் என்ற பெயரையும் சூட்டினார். இவர் ஆதீனக் குரு முதல்வர் என்றழைக்கப்பட்டார். முதல் தேசிகர் மற்றும் நான்காவது குருவான உருத்திரகோடி தேசிகர் காலத்தில், மதுரை முத்து வீரப்ப நாயக்கர் உதவியுடன், தமிழகத்தில் பல கிளை மடங்கள் தொடங்கப்பட்டன. தமிழ் வளர்க்கும் ஆதீனமான இந்த ஆதீனத்தில் சங்ககால நூல்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பித்த திரு உ.வே.சாமிநாத ஐயர் பயின்றுள்ளார். பல நூல்களை இயற்றிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை இந்த ஆதீனத்தின் புலவர். 15ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆதீனம், இதுவரை 464 தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளது. 1983ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ சிவப்பிரகாச தேசிகர் குரு மகா சந்நிதானமாக உள்ளார். இவர் பிறந்த ஊர் விக்ரமசிங்கபுரம். சைவ சித்தாந்தப் பணி, கல்வி கற்பித்தல், தீண்டாமை ஒழிப்பு ஆகிய பணிகளைச் செய்து வருகிறது இந்த மடாலயம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.