அருள்மிகு ஸ்ரீ காலபைரவர் திருக்கோவில் (க்ஷேத்ரபாலபுரம்)
God Name : ஸ்ரீ கால பைரவ மூர்த்தி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
சிவபெருமானின் கட்டளைப்படி, பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்ததால், பிரம்மஹத்தி தோஷம் கொண்ட பைரவர் பூவுலகில் பிச்சை எடுத்து வரும்போது, திருவலஞ்சுழி எனும் ஸ்தலத்தில் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. தோஷம் நீங்கியதால் ஆனந்தமாக காணப்படுகின்றார். திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகரின் யோசனைப்படி கையில் உள்ள சூலத்தை எடுத்து வீச, அந்த சூலம் விழுந்த இடத்தில் கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு. பைரவருக்குரிய பெயர்களிலேயே முதன்மையானது க்ஷேத்ரபாலர் என்பதாகும். இத்தலத்தில் க்ஷேத்ரபாலரே எழுந்தருளியிருப்பதால் இவ்வூருக்கு க்ஷேத்ரபாலபுரம் எனப் பெயர் வந்தது.
மூலஸ்தானத்தில் நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாக தரிசனம் தரும் ஸ்ரீ கால பைரவ மூர்த்தி, காசிக்கு ஒப்பான சாந்நித்யம் மிக்கவர். விரித்த சடை மேல் நோக்கியிருக்க, சதுர்புஜங்களில் கபாலம், சூலம், பாசம், டமருகம் ஆகியன ஏந்தி காட்சி தருகின்றார். காலச்சக்கரத்தை இயக்கும் அபூர்வமான மூர்த்தி. கருவறை மீது அழகிய ஏகதள விமானம். எட்டு திசைகளிலும் நந்தியம் பெருமான் அமர்ந்துள்ளார். வாயிலையொட்டி அமைந்துள்ள மஹா மண்டபத்தில் ஸ்வேத விநாயகரை தரிசிக்கலாம். பொதுவாக உக்ரமாக காணப்படும் பைரவர் இங்கு ஆனந்தமாக காணப்படுவதால், இவரை ஆனந்த பைரவர் என்று போற்றுகின்றனர். மிகப் பழமையான ஆலயமாக இருப்பினும் தனிக்கோவிலாக பைரவருக்கு இருப்பது விசேஷம். கிழக்கில் வடுக தீர்த்தம் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.