அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில் (திருக்கொள்ளிக்காடு)
God Name : சிறப்பு மூர்த்தம்: பொங்கு சனீஸ்வரர்் மூலவர்: அக்னீஸ்வரர் எனப்படும் திருக்கொள்ளிக்காடர்.
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
அக்னி (கொள்ளி) வழிபட்டதால் கொள்ளிக்காடு எனப் பெயருற்றது. அக்னி வழிபட்டதால் மூலவரின் திருமேனி
சிவந்து காணப்படுகிறது. அக்னீஸ்வரரை வழிபட்டால் சனி தோஷம் விலகும். வினையால் வந்த துன்பங்கள்
நீங்கும் என்பர்.
நன்மைகளையே செய்யும் அனுக்ரஹ மூர்த்தியாக சனீஸ்வரர் இருக்கும் ஸ்தலம். நளனுக்கு விமோசனம் கிடைத்த
ஸ்தலம் திருநள்ளாறாக இருப்பினும், ராஜபதவி, செல்வங்கள், மனைவி - மக்கள் அனைத்தும் கிடைத்த ஸ்தலம்
கொள்ளிக்காடு என ஸ்தல வரலாறு கூறுகின்றது. சோழ மன்னன் திரிபுவன சக்ரவர்த்திக்கு சனிதோஷம்
விலகிய ஸ்தலம்.
சனீஸ்வரருக்கு கொன்றைப்பூ சாற்றி வழிபட்டால் குடும்ப பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை மேலோங்கும்.
ஊமத்தம்பூ சாற்றி வழிபட்டால் மனக்கவலைகள் தீர்ந்து மனம் அமைதி பெறும். வன்னி இலைகளால்
அர்ச்சித்தால் குபேர சம்பத்து கிடைக்கும்.
பொங்கு சனி ஸ்தலம் - தேவாரத்திருத்தலம்.
மூலவர்: அக்னீஸ்வரர் எனப்படும் திருக்கொள்ளிக்காடர்் அம்பாள்: பஞ்சினும் மெல்லடியாள் எனப்படும் ம்ருது பாத நாயகி.
சிறப்பு மூர்த்தம்: பொங்கு சனீஸ்வரர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான அக்னீஸ்வரர். அழகிய சுயம்பு லிங்க மூர்த்தம்.
சிவந்த நிறமும், குட்டையான பாணமும் கொண்டுள்ளார். தேஜோமயத் திருமேனி. சுடர் ஜோதியினால் நமது சனி
தோஷத்தை எரித்து விடுகின்றார். அக்னி வழிபட்டதால் அக்னீஸ்வரர் எனும் திருநாமம். திருக்கொள்ளிக்காடர் என்றும்
கூறுவர். மேற்கு பார்த்த சந்நிதி.
மூலவர் சந்நிதிக்கு இடப்புறமாக உள்ள சந்நிதியில் பஞ்சினும் மெல்லடியாள் எனப்படும் ம்ருது பாத நாயகி எழுந்தருளி
தரிசனம் தருகின்றாள்.
சிறப்பு மூர்த்தமான சனீஸ்வரர் இங்கு விமானத்துடன் கூடிய தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். மேற்கரங்களில்
கலப்பையும், காகமும் கொண்டுள்ளார். கீழ்க்கரங்களை அபய - ஊரு ஹஸ்தங்களாக வைத்துள்ளார். சதுர்புஜங்களுடன்
கூடிய அழகான திருவுருவம். இத்தலத்தில் பொங்கு சனியாக எழுந்தருளி அருள் புரிகின்றார்.
நவகிரகங்கள் இங்கு ஒரு குறிப்பிட்ட வடிவில் இருக்கின்றன. பிரகார வலச்சுற்றில் விநாயகர், முருகப் பெருமான், மஹாலட்சுமி,
காசி விஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வில்லேந்திய தனுசு சுப்ரமண்யர்
பேரெழில் கொண்ட விக்ரஹம். கோஷ்ட மூர்த்தங்களும் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.