அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில் (திருப்பாம்புரம்)

God Name : மூலவர்: சேஷபுரீஸ்வரர் எனப்படும் பாம்புரேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கரூர்

Call : +91-

நாகராஜனாகிய ஆதிசேஷன் நெடுங்காலமாக பூமியை சுமந்து கொண்டிருப்பதால் ஏற்பட்ட களைப்பைப் போக்கிக் கொள்ளவும், மேலும் வலிமை சேர்த்துக் கொள்ளவும், கயிலாயம் சென்று பிரார்த்தித்தான். அவனுக்கு பேராற்றலை வழங்கிய சிவபெருமான், காவிரிக்கரையிலுள்ள சிவ ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுமாறு பணித்தார். அவ்வாறே ஆதிசேஷனும் மஹா சிவராத்திரியன்று முதற் காலத்தில் நாகேஸ்வர சுவாமியை கும்பகோணத்திலும், இரண்டாம் காலத்தில் நாகநாத சுவாமியை திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்து சேஷபுரீஸ்வரரையும், நான்காம் காலத்தில் நாகூர் நாகேஸ்வரரையும் வழிபட்டு வலிமையான உடலைப் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. பாம்பு வழிபட்டதால் 'பாம்புபுரம்' எனப் பெயருற்று, பின்னர் நாளடைவில் மருவி 'பாம்புரம்' என்றானது. இதற்கு சான்றாக கருவறையில் பாம்பு வாழ்கிறது. யாரையும் இதுவரை தீண்டியதில்லை. 8 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று ஸ்வாமி மீது சுற்றியிருந்தது. அர்ச்சகர் வந்ததும் சட்டையை உரித்து, ஸ்வாமிக்கு மாலை போல் அணிவித்து விட்டு போய்விட்டது. அதன் சட்டையை அங்கு பிரேம் போட்டு மாட்டி வைத்துள்ளனர். அனந்தன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய அஷ்ட மஹா நாகங்களும் பாம்புரேஸ்வரரை வழிபட்டுள்ளனர். ஆதிசேஷன் அத்திப்பூவை ஆலம் விழுதில் தொடுத்து ஸ்வாமியை பூஜித்ததால், இவ்வூரில் அத்தி பூப்பது இல்லை. ஆலம் விழுது தரையை தொடுவது இல்லை எனக் கூறுகின்றனர். வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் ஏற்பட்ட பலப்பரீட்சையில், இருவரும் சமபலத்துடன் போரிட்டனர். வெற்றி அடையாத வாயு கோபத்தில் பிராணவாயுவை நிறுத்தினார். ஆதிசேஷன் போரிலிருந்து விலகினார். தானே வெற்றி பெற்றதாக வாயு மலைகளை புரட்ட ஆரம்பித்தார். இதனால் வெகுண்ட இறைவன் இருவரையும் சபித்து விட்டார். அந்த சாபத்திலிருந்து விடுபடவும் ஆதிசேஷன் இவ்விறைவனை வழிபட்டு நற்கதி அடைந்தார். விநாயகப் பெருமான் சிவபெருமானை வணங்கியபோது, சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு, தன்னைத்தான் வணங்குகிறார் என கர்வம் கொண்டதாகவும், அதனால் இங்கு ராகு - கேதுவாக நிலை பெற்று, இறைவனை வழிபடுவதாகவும் வாய்மொழிக் கதை ஒன்றும் உள்ளது. இது ஒரு தேவாரத் திருத்தலம்.
மூலவர்: சேஷபுரீஸ்வரர் எனப்படும் பாம்புரேஸ்வரர்் அம்பாள்: பிரமராம்பிகை எனப்படும் வண்டார் குழலியம்மன். மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் மூலவரான சேஷபுரீஸ்வரர். கம்பீரமான தோற்றம் கொண்ட அழகிய திருமேனி. இவருக்கு பாம்புரேஸ்வரர், பாம்புர நாதர், பாம்புரம் உடையார் ஆகிய பெயர்களும் உண்டு. ஆதிசேஷனின் உற்சவ மூர்த்தி மூலவரை பூஜை செய்யும் நிலையில் காட்சி தருகிறார். அழகான பஞ்சலோகத் திருமேனி. ஆதிசேஷன் பூஜித்ததால் ஸ்வாமிக்கு சேஷபுரீஸ்வரர் எனப் பெயர். ஸ்வாமி கோவிலுக்கு இடப்புறமாக வடக்கு பிரகாரத்தில் அமைந்துள்ள கிழக்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் பிரமராம்பிகை எனப்படும் வண்டார் குழலியம்மன் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். அபய - வரத ஹஸ்தங்களுடனும், ருத்ராட்ச மாலையுடனும் காணப்படும் அழகு திருவுருவம். 'மாமலையாட்டி' என்று கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளது. மேற்கே கன்னி மூலையில் சந்நிதி கொண்டுள்ள ராஜராஜப் பிள்ளையார் ஸ்தல விநாயகர் ஆவார். இவரை வழிபட்டு ஆசி பெற்று வலச்சுற்றை தொடரலாம். வடகிழக்கு மூலையில் தனி சந்நிதியில் ராகுவும் - கேதுவும் ஏக சரீரத்துடன், அதாவது ஒரே உடலுடன், சிவபெருமானை நெஞ்சில் நிறுத்தி எழுந்தருளியுள்ளனர். கிழக்கு பிரகார மண்டபத்தில் பைரவர், சூரிய - சந்திரர்கள், சனிஸ்வரர், நால்வர், ஆதிசேஷன், பஞ்ச லிங்கங்கள் ஆகியோரை தரிசிக்கலாம். தட்சிணாமூர்த்திக்கு மேல் ஸ்வாமி விமானத்தின் தென்புறமாக சட்டநாதர் எழுந்தருளியுள்ளார். ஸ்தல விருட்சமான வன்னி மரத்தடியில் ஆதி பாம்புரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். 'வன்னீஸ்வரர்' என்ற திருநாமமும் உண்டு. உற்சவ மூர்த்தங்களுள் சத்ரு சம்ஹார சுப்ரமணியர் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. வஜ்ரம், சக்தி, வேல் ஆகியன கரங்களில் ஏந்தி, இடக்காலால் மயிலை மிதித்தபடி நிற்கும் கோலம். வள்ளி, தெய்வானை தேவியர்கள் உடன் உள்ளனர். பேரழகுடன் விளங்கும் விக்ரஹங்கள். சோமாஸ்கந்தர் திருவுருவமும் அழகாக உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.