அருள்மிகு வேதநாராயணப் பெருமான் திருக்கோவில் (கும்பகோணம்)
God Name : மூலவர்: ஸ்ரீ வேத நாராயணப் பெருமாள், ஸ்ரீ பிரம்மா
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
தனது சிருஷ்டி தொழிலில் அகந்தை கொண்ட பிரம்மாவை தோஷம் பற்றியது. தோஷத்திலிருந்து விடுபட இத்தலத்தில் தவம் புரிந்தார் என்றும், அவருக்கு ப்ரத்யட்சமான ஸ்ரீமந் நாராயணன் பிரம்மாவின் விருப்பப்படி இங்கு கோவில் கொண்டார் எனவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
யாகத்தின்போது ஸ்ரீ காயத்ரி தேவி தனது ஐந்தாவது திருமுகத்தை, பிரம்ம தேவனின் நான்காவது முகத்துடன் பொருத்தினாள் என்றும், அதன் காரணமாக பிரம்மாவின் நான்காவது திருமுகம் பெண்ணின் அம்சமாக மூக்குத்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
மார்கழி மாத ரோஹிணி நட்சத்திர தினத்தன்று, பிரம்மாவின் மூக்குத்தி முகத்தை தரிசனம் செய்வது சிறப்பானது என குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், இத்தலம் வந்து பிரம்மாவின் திருவடிகளில் ஜாதகத்தை வைத்து பூஜிப்பது பலனைத் தரும் என ஐதீகம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இத்தலத்தில் பிரம்ம சங்கல்ப பூஜை செய்து வழிபடுவது சிறந்ததாகும்.
நவராத்திரி அலங்காரங்கள் சிறப்பாக இருக்கும். கும்பமேளாவின்போது 10 நாட்களுக்கு பிரம்மோத்ஸவம் நடைபெறும்.
இது 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில்.
மூலவர்: ஸ்ரீ வேத நாராயணப் பெருமாள், தாயார்: ஸ்ரீ வேதவல்லி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வேத நாராயணப் பெருமான் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ஸ்ரீ பிரம்மா நான்கு திருமுகங்களுடன் கூடிய பெரிய திருமேனியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சதுர் வேதங்களை தன்னுடைய நான்கு முகங்களாகக் கொண்ட பிரம்மன் நாராயணனின் அம்சமாக காட்சி தருகின்றார். சரஸ்வதியும் காயத்ரியும் உடன் உள்ளனர். மூலவராகவும், உற்சவராகவும் காட்சி தருகின்றார்.
பிரம்மா நடத்திய வேள்வியில் உத்தரவேதியில் உதித்தவர். நரசிம்மரை வழிபடும் கோலத்தில் உள்ளார்.
ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மிகப் பெரிய திருமேனியுடன் சேவை சாதிக்கின்றார்.
ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ வெங்கடாசலபதி ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.