அருள்மிகு சக்ரவாகேஸ்வரர் திருக்கோவில் (திருச்சக்கரப்பள்ளி)
God Name : மூலவர்: ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
இது சப்த மாதர்கள் வழிபட்ட ஏழு ஸ்தலங்களுள் முதலாவது. சப்த மாதர்களில் பிராம்மி இங்கு பூஜித்து வழிபட்டார். தேவர்களும், தேவேந்திரனின் குமாரனான ஜயந்தனும் இவ்விறைவனை வழிபட்டுள்ளனர். திருமால் இவ்விறைவனை வழிபட்டு சக்ராயுதம் பெற்றதால், இவ்வூர் 'சக்கரப்பள்ளி' என்றும், இறைவன் 'சக்ரவாகேஸ்வரர்' என்றும் அழைக்கப்படலாயினர். சக்கரவாகப் பறவை வழிபட்டதாலும், சக்கர மங்கை வழிபட்டதாலும் இவ்வூருக்கு 'சக்கரப்பள்ளி' எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இவ்வூரை 'அய்யம்பேட்டை' என்கின்றனர்.
மூலவர்: ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ சக்ரலோக நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர். உயரமான பாணத்துடன் காட்சி தரும் அழகிய லிங்கம். இவருக்கு 'ஆலந்துறையீசர்' என்ற பெயரும் உண்டு. இது ஒரு சுயம்பு மூர்த்தம். பங்குனி மாதம் சங்கடஹர சதுர்த்தி அன்று சூரியன் இவ்விறைவனை வழிபடுகின்றான்.
அம்பாள் ஸ்ரீ சக்ரலோக நாயகி தனி சந்நிதி கொண்டுள்ளார். இவளுக்கு 'அல்லியங்கோதை', 'தேவ நாயகி' போன்ற பெயர்களும் உண்டு.
பிள்ளையார் மற்றும் கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றனர். யமபயம் நீக்கும் குங்கிலியக் குண்டம் இங்கு அமைந்துள்ளது.
இது சப்த மாதர்கள் பூஜித்த ஸ்தலங்களுள் ஒன்று.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.