அருள்மிகு மூகாம்பிகை திருக்கோவில் (சந்தோஷபுரம்)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

மூலஸ்தானத்தில் அன்னை மூகாம்பிகை சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில், சாந்தஸ்வரூபியாக தரிசனம் தருகின்றாள். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட விக்ரஹம். கொல்லூரில் இருப்பது போலவே தோற்றம் கொண்டுள்ளாள். யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கின்றனர். நுழைவாசலில் பளிங்கு சிலையாய் சரஸ்வதி தேவி எழுந்தருளியுள்ளார். வித்யா அபிவிருத்தி பெற பக்தர்கள் இவளை வழிபடுகின்றனர். அருகே லட்சுமி தேவியும் தரிசனம் தருகின்றாள். வலப்புறமாக வீரபத்ரசாமி கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். பித்ரு தோஷம், சத்ரு பகை நீங்க - இவருக்கு விபூதிகாப்பு செய்து வழிபடுகின்றனர். ஆதி சங்கரரின் பளிங்கு விக்ரஹம் தரிசிக்கலாம். நர்மதாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர். கொல்லூரில் உள்ளது போலவே லிங்கத்தின் மீது தங்க ரேகைகள் உள்ளன. பாணத்தின் இடப்பக்கத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரும் இருப்பதாகவும், வலப்பக்கமாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் இருப்பதாகவும் ஐதீகம். கொல்லூர் ஐதீகத்தை கடைப்பிடிக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.