அருள்மிகு ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி திருக்கோவில் - ஸ்ரீ பாலா பீடம் (நெமிலி)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

பண்டாசுரனை வதைத்த பிறகு பாலா, தன் அன்னையான மஹாசக்தி லலிதாம்பிகையிடமே ஐக்கியமானதாக புராண வரலாறு. பால வடிவத்தில் இருக்கும் அன்னையை 'ஸதா நவ வர்ஷா' என புராணங்கள் வர்ணிக்கின்றன. பல வருடங்களுக்கு முன், சுப்ரமண்ய அய்யர் என்பவரின் கனவில் தோன்றிய நெமிலி பாலா, தான் ஆற்றில் வருவதாக தெரிவித்தாள். கோவிலுக்கு அருகிலுள்ள குசஸ்தலை ஆற்றில் தினமும் தேடலானார் அய்யர். தொடர்ந்து தேடியதில் நான்காம் நாள் கண்டெடுக்கப்பட்டாள். பால வடிவத்தில் அன்னை காட்சி தரும் ஸ்தலம் இதுவே என்கின்றனர். நவ சக்திகளான திரிபுரா, திரிபுரேசி, திரிபுரசுந்தரி, திரிபுர வாசினி, திரிபுராஸ்ரீ, திரிபுர மாலினி, திரிபுர ஸித்தா, திரிபுராம்பிகா மற்றும் மஹா திரிபுர சுந்தரி வடிவங்களாகவும், நவ யோகங்களாகவும், நவ சக்கரங்களாகவும் திகழ்கிறாள் எனக் கூறப்படுகிறது. சக்தி ஸ்தலங்களுள் ஒன்று.
ஸ்ரீ பாலா பீடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி மிகுந்த வரப்பிரசாதி. ஒன்பது வயது சிறுமியாக தோற்றமும், பிரகாசமாய் ஜொலிக்கும் எழிலான திருமேனியும் கொண்டவள். இந்த நெமிலி பாலா - நவசக்திகள், நவ யோகங்கள் மற்றும் நவ சக்கரங்களை தன்னுள் அடக்கியவள் என்பர். ஸ்ரீ பாலா பீடம் - கோவிலைப் போல் இல்லாமல், ஒரு சிறிய வீடாக இருக்கிறது. மூர்த்தி சிறியது, மந்திரங்களும் சிறியது, ஆனால் அளவிடமுடியாத அளவுக்கு அருள் புரிபவள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் குழந்தை. இங்கு அர்ச்சனை கிடையாது. உண்டியல் இல்லை - "எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு, உனக்கு அதை செய்கிறேன், இதைச் செய்கிறேன்" போன்ற பிரார்த்தனைகள் பாலாவிற்கு பிடிக்காது என்கிறார் ஸ்வாமிகள். சாக்லெட், மிட்டாய் போன்ற நைவேத்யங்களே செய்கின்றனர். 1945ஆம் ஆண்டு, காஞ்சி மஹா பெரியவர் இங்கு தங்கி பூஜை வழிபாடுகள் செய்துள்ளார் என தெரிவிக்கின்றார் ஸ்வாமிகள். குறிப்பு: ஸ்வாமிகள் ஊருக்குப் போகும்போது, பால விக்ரஹத்தையும் பூஜைக்காக கூடவே எடுத்து செல்வாராம். ஆகையால் ஸ்வாமிகள் இருக்கின்றாரா என தெரிந்து கொண்டு செல்லவும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.