அருள்மிகு ஸ்ரீ சுந்தர வரதர் திருக்கோவில் (காவேரிப்பாக்கம்)

God Name : ஸ்ரீ சுந்தர வரதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

மூலவர்: ஸ்ரீ சுந்தர வரதர், தாயார்: ஸ்ரீ சுந்தரவல்லி. மூலஸ்தானத்தில் ஸ்ரீ சுந்தர வரதர் சங்கு சக்கரதாரியாக, சதுர் புஜங்கள் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஏழடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. ஆஜானுபாகுவான தோற்றம். ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராக வரதர் உற்சவ மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார். விசேஷ மூர்த்தியாக காருண்ய கருடாழ்வார் - இடக்காலை மடித்து ஊன்றி, வலது முழங்காலின் முட்டி தரையில் பட வைத்து, எப்போதும் பறக்க தயார் நிலையில் தரிசனம் தருகின்றார். இவரது உடலில் நிறைய நாகங்கள் சுற்றிக்கொண்டுள்ளன. காதுகளில் இரண்டும், மணிக்கட்டுக்களில் இரண்டும், தோள்களில் இரண்டும், இடுப்பில் ஒன்றும், மாலையாக ஒன்றுமாக அஷ்ட நாகங்கள் அலங்கரிக்கின்றன. வளர்பிறை பஞ்சமியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர். 16 கால் மண்டபத்தில் கையில் வில்லுடன் நிற்கும் ஸ்ரீ ராமரின் கற்சிலை. பின்புறம் அம்பறாத்தூணி காணப்படவில்லை. கண்களில் ஓர் அலட்சிய பாவமும், புன்னகை அரும்பிய முகமும் கொண்ட அழகான திருவுருவம். பிரகார வலச்சுற்றில் உள்ள சந்நிதிகளில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயாரையும் மற்றும் ஸ்ரீ ஆண்டாளையும் சேவிக்கலாம். ஸ்ரீ ராமர் சந்நிதியில் - அழகிய ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஹனுமான் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம். ஸ்ரீ ஹயக்ரீவர், தவழும் நவநீத கிருஷ்ணன், சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ராமர், லட்சுமணர், சீதை, ஹனுமன் ஆகியோரின் உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம். பெருமாள் பாதம் சிறிய சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளது. நுழைவாசலின் அருகே நெடிதுயர்ந்து வளர்ந்திருக்கும் வேப்ப மரமும், அதனுள் வளர்ந்துள்ள அரசங்கன்றும் அதிசயமானது. அதனடியில் ஸ்ரீ அனுக்ரஹ ஆஞ்சநேயர் எழுந்தருளி ஆசி வழங்குகிறார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.