அருள்மிகு ஞானபண்டிதன் திருக்கோவில் (ஞானமலை)
God Name : ஞானபண்டிதன் எனப்படும் சுப்ரமண்ய சுவாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
சுற்றிலும் பசுமையான வயல்களும், வெப்பாலை மரங்களும், பெரிய ஏரியும் கொண்டு, இயற்கை சூழலில் அமைந்துள்ள மலை. 160 படிகள் ஏறி மேலே போக வேண்டும். நிழற் குடையாக கல்நார் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானத்தில் ஞான பண்டிதன் பிரம்ம சாஸ்தா கோலத்தில் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். மீண்டும் மீண்டும் தரிசிக்க தூண்டும் அழகு திருவுருவம். ருத்ராட்ச மாலை, கமண்டலம் கொண்டு ஞான ஸ்வரூபனாக காட்சி தருகிறார். தெற்கு பிரகாரத்தில், அருணகிரிநாதருக்கு காட்சி தந்த குறமகள் தழுவிய குமரன் தரிசனம் தருகின்றார். இரண்டு திருப்புகழ்களை பெற்றவர். மேற்புரத்தில் உள்ள கோவிலில், ஞானகிரீஸ்வரரும் ஞான பூங்கோதையம்மனும் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். பின்புறமாக முருகனின் கால் பதிந்த பூமி. பாலை சித்தரின் ஜீவ சமாதி பீடம் இருக்கின்றது. இங்கிருந்து பார்த்தால் வடமேற்கில் வள்ளிமலை, வடகிழக்கில் திருத்தணி இரண்டும் சம தூரத்தில் காட்சி தருவது முக்கோண அமைப்பு ஒன்றை பிரதிபலிக்கின்றது. அருணகிரிநாதருக்கு யோக அநுபூதி அருளிய ஸ்தலம் என்பர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.