அருள்மிகு யோக நரசிம்மஸ்வாமி/யோக ஆஞ்சநேயர் திருக்கோவில் (சோளிங்கபுரம்)

God Name : ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் (சிறியமலை), ஸ்ரீ யோக நரசிம்மர் (பெரியமலை), பக்தவத்ஸலன் (அடிவாரம்)

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

ஸ்தல வரலாறு (பெரிய மலை) மகாவிஷ்ணுவின் அவதாரங்களிலேயே பெருமை வாய்ந்ததான நரசிம்ம அவதாரம் பக்தன் பிரஹ்லாதனுக்காக தோன்றியது. அந்த அவதாரக் காட்சியைப் பார்க்க ஆசைப்பட்ட சப்த ரிஷிகள், இங்கு கடுந்தவம் புரிய முற்பட்டனர். அவர்கள் தவம் செய்ய ஆரம்பித்து ஒரு நாழிகைக்குள் ப்ரத்யட்சமானார் நரசிம்மர். கடிகா எனும் சொல்லுக்கு ஒரு நாழிகை எனப் பொருள். ஒரு நாழிகைப் பொழுதில் தரிசனம் கிடைத்ததாலும், ஒரு நாழிகையேனும் இத்தலத்தில் வழிபட்டால் முக்தி கிடைப்பதாலும், இத்தலத்திற்கு கடிகாசலம் என்றும், திருக்கடிகை என்றும் பெயர் வந்தது. கடிகா என்றால் தமிழில் பூஞ்சோலை என்றும் பொருளுண்டு. "வண்டு வளங்கிளரும் நீள் சோலை வண்பூங்கடிகை" என்று பேயாழ்வார் பாடியுள்ளார். ஊர்க் கோவில் (அடிவாரம்) பக்தனுக்கு உசிதமானவற்றை தருபவன் என்பதால் பக்தோசிகன் என்று போற்றுகின்றனர். ஸ்தல வரலாறு (சிறிய மலை) இந்திரத்யும்னன் என்ற மன்னன், அரக்கர்களுடன் போர் புரிந்து வெற்றி அடைய நரசிம்மரின் அருளை வேண்டினான். ஆஞ்சநேயரிடம் தனது சங்கு, சக்கரங்களை கொடுத்து, அரக்கர்களை அழித்து, அரசருக்கு உதவுமாறு பணித்தார் நரசிம்மர். அதன்படி அரக்கர்களை அழித்து இந்திரத்யும்னனுக்கு உதவுகிறார் ஆஞ்சநேயர். மலையிலுள்ள தடாகத்தில் சங்கு, சக்கரங்களை அலம்பி, அதை திரும்ப ஒப்படைக்க, நரசிம்மரிடம் சென்றார் ஆஞ்சநேயர். அதை ஆஞ்சநேயரே தன் வசம் வைத்துக்கொண்டு சிறிய மலையில் எழுந்தருளி, தரிசிக்க வரும் பக்தர்களை ரட்சிக்குமாறு கூறிவிட்டார் நரசிம்மர் என ஸ்தல வரலாறு. அந்த தடாகம் சக்ர தீர்த்தம் எனும் பெயரில் உள்ளது. சின்ன மலையடிவாரத்திலுள்ள கொண்டபாளையத்தில் நிறைய சத்திரங்கள் உள்ளன. பிரார்த்தனைக்காரர்கள் இங்கு ஒரு மண்டலம் தங்கி, பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்று. அஷ்ட நரசிம்ம க்ஷேத்ரங்கள்: பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கர்குடி, சோளிங்கர், நாமக்கல், அந்திலி, சிங்க பெருமாள் கோவில், சிந்தனைவாடி.
பெரிய மலை: 750 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்டுள்ள மலை. மூலவர்: யோக நரசிம்மஸ்வாமி, தாயார்: அம்ருதவல்லி. மூலவரான யோக நரசிம்மர், ஹேம கூட விமானத்தின் கீழ், யோக நிலையில், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, வீற்றிருந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். இவரை அக்காரக்கனி பெருமாள் என்றும், தக்கான் (தயாளு) என்றும் திருமங்கை ஆழ்வார் போற்றுகிறார். சப்தரிஷிகளுக்கு ப்ரத்யட்சமானதாக ஐதீகம். சங்கு-சக்கரம் ஏந்தியும், சாளக்ராம மாலையினை அணிந்தும் சாந்த ஸ்வரூபனாக சேவை சாதிக்கின்றார். 11 மாதங்கள் எப்போதும் யோக நிலையிலிருக்கும் யோக நரசிம்மர், 12வது மாதமான கார்த்திகையில் கண் திறந்து அருளுவதாக ஐதீகம். கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலை மோதும். பேய் பிடித்தவர்கள், மனோ வியாதி உள்ளவர்கள், நோயுற்றவர்கள், பில்லி சூனியம் ஏவல் ஆகியவற்றால் பாதிப்பு அடைந்தவர்களை குணப்படுத்தும் சிங்கபிரான் மிகுந்த வரப்பிரசாதி. தாயார் அம்ருதவல்லிக்கு வெள்ளிக்கிழமைகளில் பால், பஞ்சாம்ருதம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்கிறார்கள். மலை மேல் உள்ள பாறைத் தொட்டியில், தனகுண்டு எனப்படும் தீர்த்தச் சுனையின் ஜலம் மிகவும் நன்றாக இருக்கும். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார், கண்ணன், ஆதிசேஷன், கருடாழ்வார் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். பெரிய மலை அடிவாரத்தில் சற்றுத் தள்ளி, தக்கான் குளம் எனும் பிரம்ம தீர்த்தம் சுத்தமான ஜலம் கொண்டது. குளக்கரையில் உள்ள சந்நிதியில் வரதராஜப் பெருமாளை சேவிக்கலாம். தொட்டாச்சார்யாருக்கு கருட சேவை சாதித்ததாக ஐதீகம். உச்சி வேளையில் தரிசிக்கலாம். ஊர்க் கோவில் (அடிவாரம்) பெரிய மலையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் ஊரில் உள்ள பெரிய கோவில் (அடிவாரம்). இக்கோவிலில் யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தமான பக்தவத்ஸலன் சேவை சாதிக்கின்றார். பக்தனுக்கு உசிதமானவற்றை தருபவன் என்பதால் பக்தோசிகன் என்ற திருநாமமும் உண்டு. பின்புறம் ஆதி கேசவப் பெருமாள். உற்சவத் தாயாராக சுதாவல்லி எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். தொட்டாச்சார்யார் அவதார ஸ்தலம். சிறிய மலை: 350 அடி உயரம், 406 படிக்கட்டுகளைக் கொண்டுள்ள மலை. மூலவர்: ஸ்ரீ யோக ஆஞ்சநேயர். ஸ்ரீ யோக ஆஞ்சநேயர், நரசிம்ம மூர்த்தியை பார்த்த வண்ணம் யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். சங்கு, சக்கரம் ஏந்திய மேற்கரங்கள் மற்றும் ஜபமாலை, ஜபசங்க்யை முத்திரை கொண்ட கீழ்க்கரங்கள் ஆகியவற்றுடன் கூடிய சதுர்புஜங்கள் கொண்ட அழகிய திருமேனி. இங்கு ஹனுமனுக்காக ஸ்ரீ ராமரும், ஸ்ரீ ராமருக்காக ஸ்ரீ ரங்கநாதரும் எழுந்தருளி உள்ளனர். ரங்கநாதன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்களுடன் பால ரங்கநாதர், ராம - லக்ஷ்மண - சீதா, சக்கரத்தாழ்வார், நவநீத கிருஷ்ணன் ஆகியோரை சேவிக்கலாம். சிறிய மலையிலிருந்து பார்த்தால், ஹனுமன் சந்நிதிக்கு நேராக நரசிம்மர் காட்சி அளிக்கும் விதத்தில் பெரிய மலை அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.