அருள்மிகு தன்வந்த்ரி ஆரோக்ய பீடம் (வாலாஜாப்பேட்டை)

God Name : ஸ்ரீ தன்வந்த்ரி பகவான்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

இதை ஸ்தாபித்தவரும் பரிபாலிப்பவரும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
முதலில் நாம் தரிசிக்கும் சந்நிதியில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் தனது இடக்கையால் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிப் பிடித்தபடி தரிசனம் தருகின்றார். கூரை இல்லாத சந்நிதியில் இவரைத் தரிசிக்கலாம். இவரது திருமார்பில் ஸ்ரீ ராமரது திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஒன்பது படிகள் ஏறிச் சென்று பார்க்க வேண்டும். படிகளில் ஆஞ்சநேயரின் ஒன்பது வகையான சுதை சிற்பங்களைக் காணலாம். உற்சவ மூர்த்தியான ஆஞ்சநேயரின் பஞ்சலோக விக்ரஹத்தைச் சேவிக்கலாம். உள்ளே பிரவேசித்ததும் நாம் காண்பது மூலிகை வனம். இங்கு முனீஸ்வரர், நவ கன்னிகைகள், அத்ரி பாதம், தங்க பாபா, சூரிய பாபா, வள்ளலார், மஹா பெரியவா ஆகியோரின் திருவுருவங்களைத் தரிசிக்கலாம். ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ பஞ்சமுக காயத்ரி, ஸ்ரீ தத்தாத்ரேயர், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சந்நிதிகளைக் காணலாம். ஐந்து முகங்கள், பத்துக் கரங்கள் கொண்டு, சுகாசனக் கோலத்தில், பத்ம பீடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காயத்ரியின் திருவுருவம் பஞ்சலோகத்தில் வடிக்கப்பட்டது என்பர். ஸ்ரீ மஹாமேரு ஸ்ரீ சக்கரமாக அமைத்துள்ளனர். மூன்று முகங்கள், ஆறு கரங்கள் கொண்டுள்ள ஸ்ரீ தத்தாத்ரேயர் உருவம் பச்சை கல்லினால் உருவாக்கியுள்ளனர். மான், மழு, சக்கரம், கமண்டலம், ஜபமாலை ஏந்திய கரங்கள். வெளிர்பச்சை கல்லினால் வடிக்கப்பட்ட ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் திருவுருவம் அழகானது. கீழே ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருவுருவமும் காணலாம். ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஒரு பக்கமும், பிணி தீர்க்கும் தன்வந்த்ரி மறு பக்கமும் இருக்கும் ஒரே வடிவம் அற்புதமானது. திருவோண நட்சத்திர நாட்களில் தைலக்காப்பு செய்கின்றனர். 12 ராசிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய விருட்சங்கள் நடப்பட்டு கால சக்கரம் அமைத்துள்ளனர். பக்தர்கள் தாங்களே ஜலம் விட்டு, வலம் வரலாம் என்கின்றனர். அஷ்டதசபுஜ மகிஷாசுரமர்த்தினியின் பிரம்மாண்டமான தோற்றம் பிரம்மிக்க வைக்கின்றது. பதினெட்டுக் கரங்களிலும் பதினெட்டு வித ஆயுதங்களுடன் காட்சி தருகிறாள். காலடியில் உள்ள மகிஷனின் உருவம் வித்தியாசமானது. மனித உடலும் எருமைத் தலையும் கொண்ட தோற்றம். மகிஷனை வதைத்து, பின் சினம் நீங்கி, சாந்த ஸ்வரூபியாக இருக்கிறாள். சூலினி யாகம், ம்ருத்யுஞ்சய ஹோமம் ஆகியன நடக்கும் சந்நிதி. எலுமிச்சம் பழம், மாங்கல்ய சரடு ஆகியன தருகின்றனர். ஆதார பீடத்தின் கீழ் பத்து கோடி மஹாமந்த்ர லிகிதங்கள் வைக்கப்பட்டுள்ளன. பதினாறு கரங்களுடன் காட்சி தரும் கார்த்தவீர்யார்ஜுனர் காவல் தெய்வமாக விளங்குகிறார். பூஜித்த ரக்ஷை தருகின்றனர். பஞ்ச பட்சி தோஷங்கள், சர்ப்ப தோஷங்கள் விலக அஷ்டநாக கருடனை வழிபடுகின்றனர். இவர் தனது உடம்பில் எட்டு நாகங்களை ஆபரணங்களாகத் தரித்துள்ளார். அடுத்து விஷ்ணு பாதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ பாத பீடத்தைத் தரிசிக்கலாம். பித்ரு தோஷம் போக்க வல்லது. மூலஸ்தானத்தில் தன்வந்த்ரி பகவான் மூலவராக கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். ஆறடி உயரம் கொண்ட அழகான திருமேனி. சங்கு, சக்கரம், அமிர்த கலசம், சீந்தில் கொடி கொண்ட சதுர்புஜங்களுடன் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். கத்தி, ஸ்டெதாஸ்கோப், கைக்கடிகாரம் ஆகியன வைத்துள்ள மருத்துவக் கடவுள் மார்பில் சாளக்ராம மாலைகளும், துளசி மாலைகளும் அணிந்து காணப்படுகிறார். 54 கோடி மந்திரங்கள் கொண்ட லிகிதங்களை உள்ளடக்கிய நிலவறையில் யந்திரங்களாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதன் மேல் எழுப்பப்பட்ட கருவறையில் ஸ்ரீ தன்வந்த்ரி பகவானின் திருவுருவம் நிறுவப்பட்டுள்ளது. ஆரோக்ய லட்சுமி விசேஷ மூர்த்தியாக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். பதினாறு கரங்களில், பதினாறு ஆயுதங்களுடன் தரிசனம் தருகின்றார் சக்கரத்தாழ்வார். பின்புறம் நரசிம்மர் இல்லை. ஏக சரீரத்தில் ராகு-கேது திருவுருவம். அரசு/வேம்பு பிணைந்த மரத்தடியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். மரகதேஸ்வரர், வாஸ்து பீடம் ஆகியன தரிசிக்கலாம். ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவரின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. அம்பிகையை மடியில் இருத்தி உள்ளார். வலக்கரத்தில் அமிர்த கலசம் ஏந்தியுள்ளார். பிரதி தேய்பிறை அஷ்டமியில் யாகம் நடத்துகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.