அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் (வேப்பூர்)
God Name : வசிஷ்டேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
ஸ்தல வரலாறு: சிவபெருமான்-பார்வதி தேவியின் திருமணக் காட்சியைக் காண காஞ்சிபுரம் வந்த ரிஷிகளும், முனிவர்களும் தத்தம் நித்ய பூஜை அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க அமைதியான இடம் தேடினார்கள். காஞ்சிபுரத்தில் கூட்டமாக இருந்ததால், சற்றுத் தள்ளி வந்து இங்கமர்ந்து வழிபாடுகளை நடத்தினர். ஆறு ரிஷிகள் வெவ்வேறு இடங்களில் தங்கி பூஜைகளை மேற்கொண்டனர். இந்த ஆறு இடங்களை உள்ளடக்கிய வனப் பகுதிகளுக்கு ஷடாரண்யம் எனப் பெயர். தமிழில் ஆற்காடு என்பர். சிவபெருமான் தனது திருமணக் கோலக் காட்சியை வசிஷ்டருக்குக் காட்டியருளிய ஸ்தலம் இது. நீத்தார் கடன் செய்ய மறந்து போனவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், பித்ரு தோஷம் நீங்குவதாக ஐதீகம். இவ்வூரில் வேப்ப மரங்கள் மிகுந்து காணப்பட்டதால், இவ்வூர் வேப்பூர் என அழைக்கப்படுகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் வசிஷ்டேஸ்வரர். சப்த ரிஷிகளுள் ஒருவரான வசிஷ்டர் வழிபட்டு பூஜித்த லிங்கம். இதனால் வசிஷ்டேஸ்வரர் என்று பெயர் கொண்டார். அம்பாள் பாலகுஜாம்பிகை அழகு திருவுருவமாக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். கோஷ்ட மூர்த்தங்களும், தட்சிணாமூர்த்தியின் திருவுருவமும் அழகாக உள்ளன. இங்குள்ள முருகன் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். வசிஷ்டரின் திருவுருவம் அழகாக இருக்கிறது. இவ்விறைவனை வழிபட்டபிறகே வசிஷ்டர் அருந்ததியை திருமணம் செய்து கொண்டார் எனக் கூறுவர். வசிஷ்டருக்கு வில்வ மாலை அணிவித்து, மிளகுப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். ஷடாரண்ய க்ஷேத்திரங்களுள் ஒன்று.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.