அருள்மிகு பரத்வாஜீஸ்வரர் திருக்கோவில் (புதுப்பாடி)

God Name : பரத்வாஜீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

மதுரை

Call : +91-

சிவபெருமான்-பார்வதி தேவியின் திருமணக் காட்சியை காண காஞ்சிபுரம் வந்த ரிஷிகளும், முனிவர்களும் தத்தம் நித்ய பூஜா அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க அமைதியான இடம் தேடினார்கள். காஞ்சிபுரத்தில் கூட்டமாக இருந்ததால், சற்றுத் தள்ளி வந்து இங்கு அமர்ந்து வழிபாடுகளை நடத்தினர் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆறு ரிஷிகள் வெவ்வேறு இடங்களில் தங்கி பூஜைகளை மேற்கொண்டனர். இந்த ஆறு இடங்களை உள்ளடக்கிய வனப் பகுதிகளுக்கு ஷடாரண்யம் எனப் பெயர். தமிழில் 'ஆற்காடு' என்றும் கூறுவர். இங்கு நான்முகனே (பிரம்மா) நேரில் வந்து, உலக க்ஷேமத்திற்காக, யாகங்கள் செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. காலப்போக்கில் மண்ணுக்குள் புதையுண்டு போன லிங்கத்தை, விவசாயி ஒருவர் நிலத்தை உழும்போது கண்டெடுத்தார். ஏர்க்கலப்பை பட்ட தழும்பைக் லிங்கத்திருமேனியில் காணலாம். ராமாயண காலத்தில் பரத்வாஜ முனிவர்க்கு ஸ்ரீ ராமபிரான் காட்சி தந்த ஸ்தலம். இவ்வாலயத்தை சுற்றிலும் மாமரங்கள் மிகுந்து காணப்பட்டதால் ஆம்ரவனம் என ஆதிகாலத்தில் அழைக்கப்பட்ட ஸ்தலம். ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்: வன்னிவேடு - அகஸ்தீஸ்வரர் - அகஸ்தியர், குடிமல்லூர் - அத்ரீஸ்வரர் - அத்ரி மகரிஷி, நாவ்லாக் - காஸ்யபேஸ்வரர் - காஸ்யபர், காரை - கௌதமேஸ்வரர் - கௌதமர், வேப்பூர் - வசிஷ்டேஸ்வரர் - வசிஷ்டர், மேல் விஷாரம் - வால்மீகீஸ்வரர் - வால்மீகி, புதுப்பாடி - பரத்வாஜீஸ்வரர் - பரத்வாஜர். சப்தரிஷிகள் ஸ்தாபித்து வழிபட்ட இந்த ஏழு சிவலிங்க மூர்த்தங்களையும், இந்த ஏழு ஸ்தலங்களுக்கும் சென்று, ஒரே நாளில் தொடர்ச்சியாக, சிவராத்திரி அன்று தரிசிப்பது புண்யமாகும். பாலாற்றின் வடகரையில் நான்கும், தென்கரையில் மூன்றும் உள்ளன. இவைகளே ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் எனப்படும்.
மூலவர்: பரத்வாஜீஸ்வரர், அம்பாள்: தர்மசம்வர்த்தினி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள்பாலிப்பவர் பரத்வாஜீஸ்வரர். சப்த ரிஷிகளுள் ஒருவரான பரத்வாஜ முனிவர் இந்த லிங்கத்தை நிறுவி, வழிபட்டு, பூஜித்துள்ளார். இதனால் இவ்விறைவனுக்கு பரத்வாஜீஸ்வரர் என்று பெயர். லிங்கத்திருமேனியில் ஏர்க்கலப்பை பட்ட தழும்பைக் காணலாம். அம்பாள் தர்மசம்வர்த்தினி எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். கஜப்பிருஷ்ட விமானத்துடன் கூடிய கலைநயம் மிக்க கோவில். இத்தலத்தில் ஸ்ரீ ராமரின் பாதங்கள் காணப்படுகின்றன. பரத்வாஜ முனிவரின் திருவுருவம் கூப்பிய கரங்களுடன் இருக்கிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.