அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில் - தங்கக் கோவில் (ஸ்ரீபுரம்)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

செங்கல்பட்டு

Call : +91-

பெரிய புற்று ஒன்றிலிருந்து சுயம்புவாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட அன்னை நாராயணி மிகுந்த வரப்பிரசாதி. அசரீரி மூலமாக இதனை அறிந்துகொண்ட சக்தி அம்மா என்பவர் இவ்வாலயத்தை ஸ்தாபித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. 750 சிவாச்சாரியார்களைக் கொண்டு ஒரு கோடி முறை மூல மந்திர பாராயணம் செய்வித்து, ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து அன்னைக்கு மூலஸ்தானம் அமைத்துள்ளனர். இங்குள்ள அகண்ட தீபத்தில் நெய் ஊற்றி, ஒன்பது முறை பிரதட்சிணம் செய்பவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெறுவர். 100 ஏக்கர் நிலப்பரப்பில், 55,000 சதுர அடி பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயம். இயற்கை எழில் சூழ்ந்துள்ள குன்றில், அருள்மிகு சக்தி அம்மாவால் ஸ்தாபிக்கப்பட்ட ஆலயம். விமானம், அர்த்த மண்டபம் மற்றும் தூண்கள் யாவும் தங்கத்தினால் செய்துள்ளனர். உள்ளுக்குள் காப்பர் லேயர் கொடுத்து, மேலே 9 லேயர்கள் தங்கத்தினால் வேய்ந்து, சிற்பங்களை உருவாக்கியுள்ளதாகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. திருமலை தேவஸ்தானத்தைச் சேர்ந்த பொற்கொல்லர்கள் 400 பேர் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்து நிர்மாணித்துள்ளனர். 1500 கிலோ தங்கம் கொண்டு 600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியுள்ளனர். மலையின் மீது சூரியன் படாத தீர்த்தம் (சுனை) ஒன்றும் உள்ளது. அது பிரம்ம தீர்த்தம்.
மூலஸ்தானம் செல்லும் வழி நெடுக 200 மீட்டர் தூரத்திற்கு நட்சத்திரப் பாதை உருவாக்கியுள்ளனர். இருமருங்கிலும், வேதங்களிலிருந்து முக்கியமான சாரங்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர். நட்சத்திரப் பாதையைச் சுற்றிலும் மற்றும் இரண்டு பக்கங்களிலும் 30,000 மரங்கள் நடப்பட்டுள்ளன. பாதையின் நடுவே செல்லும் வழி மூலஸ்தானம் செல்கிறது. மூலஸ்தானத்தில் அன்னை லட்சுமி நாராயணியைத் தரிசிக்கலாம். சங்கு - சக்கரம், அபய-வரத ஹஸ்தங்கள் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருவுருவம். கிரானைட் கல்லால் உருவாக்கப்பட்டது. தங்கத் தாமரையில் அமர்ந்த திருக்கோலம். தங்கக் கவசம் சாத்தியுள்ளனர். வைரம், வைடூரியம், முத்து, பவளம் ஆகியன அணிந்து ஜொலிக்கின்றாள். மீண்டும் மீண்டும் தரிசிக்கத் தூண்டும் அழகு வாய்ந்த திருவுருவம். மூலஸ்தானத்தைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு, அதில் புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் நிரப்பப்பட்டுள்ளது. எதிரே 10 அடுக்கு கொண்ட திருவிளக்கு ஐம்பொன்னால் உருவானது காணப்படுகிறது. 27 அடி உயரம் கொண்ட விளக்கு. 1000 திரிகள் போட்டு ஏற்றலாம் என்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.