அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் (விரிஞ்சிபுரம்)

God Name : மார்க்கபந்தீஸ்வரர் எனும் வழித்துணைநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

செங்கல்பட்டு

Call : +91-

ஸ்தல வரலாறு கரன் வழிபட்டதால் கரபுரம் என்ற பெயர் கொண்ட ஸ்தலம். பிரம்மனுக்கு விரிஞ்சன் என்றொரு பெயரும் உண்டு. ஆகவே பிரம்மன் வழிபட்டதால் விரிஞ்சை எனப்படும் விரிஞ்சிபுரம் எனப் பெயர் கொண்டது. சிவபெருமானது அடிமுடி காணும் படலத்தில், முடியைக் கண்டதாக பொய்யுரைத்த பிரம்மன் சாபம் பெற்று, இத்தலத்து சிவாச்சார்யார் சிவநாதருக்கும், நந்திக்கும் மகனாகப் பிறந்து சிவசர்மன் எனப் பெயர் கொண்டு வளர்ந்து வந்தார். திடீரென தந்தையார் காலமானார். தந்தையார் இறந்து விட்டதால், நிர்க்கதியான பாலகன் சிவசர்மனுக்கு, உதவி செய்யுமாறு சிவபெருமானை வேண்டினாள் நந்தினி அம்மையார். அவளது கனவில் தோன்றிய சிறுவனை மறு நாள் காலையில் பிரம்ம தீர்த்த குளத்தில் நீராட்டி வை என்று கூறினார். அதன்படியே நீராடி தயாராக இருந்த சிறுவனை, ஒரு வயதானவரின் தோற்றத்தில் வந்த ஒரு முகூர்த்த காலத்திற்குள், உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியன செய்து வைத்தார். பூஜை செய்பவர் இறந்துவிட்டபடியால், கோவிலை பூட்டினார்கள். சிறுவன் வந்து நின்றதும் கதவு தானாக திறந்தது. சிறுவன் உள்ளே சென்று அபிஷேகம் செய்ய முற்பட்டான். ஆறடி உயரத் திருமேனி ஆனபடியால் சிறுவனின் கைகளுக்கு எட்டவில்லை. சிறுவன் தனது இயலாமைக்கு அழுதான். உடனே சிவலிங்கம், முன்பக்கமாக வளைந்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்ட அதிசயம் நிகழ்ந்தது. சிறுவனுக்கு தீட்சை தந்து வழி காட்டியதாலும், மிளகு வியாபாரியான சிவபக்தன் ஒருவனை, கள்வர்களிடமிருந்து காப்பாற்றியதாலும், மார்க்கபந்து எனப் பெயர் கொண்டார். தேவார வைப்புத்தலம்
மூலவர்: மார்க்கபந்தீஸ்வரர், அம்பாள்: மரகதவல்லி மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக கிழக்கு பார்த்து எழுந்தருளி உள்ளார் மார்க்கபந்தீஸ்வரர். ஆறடி உயரம் கொண்ட நெடிந்துயர்ந்த திருமேனி. முன்புறமாக சாய்ந்த தோற்றம். ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தரும் தேஜோமய லிங்கம். இவருக்கு வழித்துணை நாதர் என்றும் பெயர். பங்குனி மாதத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. கிழக்கு பார்த்த தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள் மரகதவல்லி. அழகான திருவுருவம். பச்சைப்பசும்கொடி என்ற பெயரும் உண்டு. தனது கரிய நிறம் மாற வேண்டி இத்தலத்தில் அம்பிகை கடுந்தவம் மேற்கொண்டாள். பொற்பனம்பழங்களை பொன்னுரு பெற்றாள். கோஷ்ட மூர்த்தங்கள் காணற்கரியவை. கல்யாண மண்டபங்களின் தூண்களில் காணப்படும் சிற்பங்கள் சிறந்த வேலைப்பாடுகளுடையவை. சிம்ம வாகனத்தில் பஞ்சமுக விநாயகர், சிந்தூர கணபதி, லட்சுமி, சரஸ்வதி, சந்த்ரமௌலீஸ்வரர், சப்த மாதாக்கள், மிகப் பெரிய நடராஜர் சபை, 1008 சிவலிங்கம் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வெளி பிரகாரத்தில் அழகிய பஞ்சமுக லிங்கத்தை தரிசிக்கலாம். 25 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள பெரிய கோவில். வடக்கு சுற்றில் உள்ள தூணில், சந்திர வடிவில் எண்களும், குறுக்கே பள்ளமும், தூணின் மேற்புற பள்ளத்தில் ஒரு குச்சியும், குச்சியின் நிழல் எண்களின் மீது விழுந்து நிழல் காட்டும் யுக்தியும், வியக்க வைக்கும் அமைப்பு. 1347ல் வரதட்சிணை ஒழித்ததற்கான கல்வெட்டு ஒன்றும் இவ்வாலயத்தில் இருக்கின்றது. இங்குள்ள சிம்மகுளம் எனும் கௌரி தீர்த்தம் - அம்பாளின் கரிய நிறம் நீங்க ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆதிசங்கரரால் பீஜாட்ச யந்திரம் ஸ்தாபிக்கப்பட்ட தீர்த்தம். விரிஞ்சிபுரம் மதில் அழகு என்பர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.