அருள்மிகு ஸ்ரீ தாமோதரப் பெருமாள் திருக்கோயில் (தாமல்)
God Name : ஸ்ரீ தாமோதரப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
பாலகிருஷ்ணனின் விஷமங்களை பொறுக்க முடியாமல், யசோதை உரலில் கட்டிப் போட, உரலுடன் ஓடி மரங்களை சாய்த்த லீலையால் கயிறு அழுந்தி, வயிற்றில் தழும்பு ஏற்பட்டது. அந்த தழும்புடனேயே காட்சி அளிக்கும் தாமோதரன், பக்தனின் வேண்டுதலுக்காக இங்கு பிரசன்னம். தாம - உதரன் என்பதே தாமோதரன்.
பல நூற்றாண்டுகளாக மாத்வர்களால் பூஜிக்கப்பட்ட விக்ரஹம், தற்போது வைணவர்களால் நடத்தப்படுகிறது. இன்றளவும் பெருமாளுக்கு கோபி சந்தனமே இடுகின்றனர். துவாதச மஹாவிஷ்ணுவின் நாமங்களில் உயர்ந்தது தாமோதரன் எனும் திருநாமமே எனக் கூறுவார்கள்.
ஆதியில் தாமல் நகரமே பிரதானமாக இருந்ததாக கல்வெட்டு குறிப்புகள் குறிப்பிட்டுள்ளன.
மூலவர்: ஸ்ரீ தாமோதரப் பெருமாள், தாயார்: ஸ்ரீ திருமாலழகி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ தாமோதரப் பெருமாள், சங்கு-சக்கர தாரியாய், அபய ஹஸ்தம் - ஊரு ஹஸ்தம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார்.
தாயார் ஸ்ரீ திருமாலழகி புன்னகை தவழும் முகத்துடனும் எழிலான திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீஹரிப்ரியா என்றும் அழைக்கப்படுகிறார்.
உற்சவ மூர்த்திகள் பேரெழில் கொண்டவை. ஆண்டாள், ராமானுஜர், ஆழ்வார்கள் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.