அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (அடையபலம்)

God Name : ஸ்ரீ சுந்தரேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

சிவாம்சமாக அவதரித்த மகான் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரின் தாயார் பிறந்த ஊர் இது. இவரது தாயார், திருவிரிஞ்சை ஆலயத்திலுள்ள மகா கணபதியை தியானித்து, அந்த சந்நிதியிலேயே அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு நாகப்பாம்பு படமெடுத்து ஆடி, பின்னர் கணபதியின் சிலைக்குள் மறைந்தது. இதன்பின் கருவுற்ற அம்மையாருக்கு பிறந்த குழந்தைக்கு விநாயக சுப்ரமண்யன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தார். (செல்லப் பெயர் அப்பா). அந்த சிவாம்சம் பொருந்திய குழந்தையே பிற்காலத்தில் அப்பைய தீக்ஷிதர் எனும் மகானாக உருவெடுத்தார். வேலூரை ஆண்ட பொம்மி நாயக்கரிடம் ராஜகுருவாக இருந்தவர் அப்பைய தீக்ஷிதர். இவர் சிவார்ச்சாமணி தீபிகா எனும் நூலை எழுதியதால் கனகாபிஷேகம் செய்தனர். அந்தப் பொருட்களைக் கொண்டு 500 மாணாக்கர்களைக் கொண்ட கலாசாலை ஒன்றும் நிறுவினார். சைவத்திற்கும் அத்வைதத்திற்கும் அரிய தொண்டாற்றினார். தவிர, காலகண்டேஸ்வரர் ஆலயம், வரதராஜப் பெருமாள் ஆலயம் ஆகியவற்றை அடையபலத்தில் கட்டிய பெருமை இவரையே சாரும். ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி, சிவானந்த ஆஸ்ரமம், ரிஷிகேசம் மற்றும் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர், தேவி உபாசகர் போன்ற மகான்கள் இவரின் வழித்தோன்றலே என்பர். விரிஞ்சிபுரத்திற்கு வரும் மகான்கள் இளைப்பாற, தங்கி பூஜை செய்ய மடாலயம் ஒன்றையும் நிறுவினார். தான் பூஜித்து வந்த சிவலிங்கம் மற்றும் சாளக்ராமம் ஆகியவற்றை மடத்திலேயே விட்டுச் சென்றார். அவை தற்போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ளன. இவர் இயற்றிய ஸ்தோத்திரங்களுள் முக்கியமானவைகளாகக் கருதப்பட்டவை - அபிதகுசாம்பாஸ்தவம், ஹரிஹராத்மிகா ஸ்துதி, மார்க்கபந்து ஸ்தோத்திரம், ரத்னத்ரய பரீக்ஷா, பஞ்சரத்ன ஸ்துதி, கங்காதராஷ்டகம் ஆகியன.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர், அம்பிகை மீனாட்சி, சுந்தரேஸ்வரர், அங்காள பரமேஸ்வரி மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். மடாலயத்தில் ஐயப்பன் வழிபாட்டு மண்டபம் உள்ளது. அடையபலத்தில் ஞானாம்பிகா சமேத நீலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் காலகண்டேஸ்வரர் கோவில்கள் உள்ளன. பையூரில் ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோவில் மற்றும் பெருந்தேவி சகித கரிய மாணிக்கப் பெருமாள் ஆகிய இரண்டு கோவில்கள் உள்ளன. ஆரணியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் பையூர் அமைந்துள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.