அருள்மிகு கதிர்வேல் முருகன் திருக்கோவில் (வள்ளிமலை)

God Name : கதிர்வேல் முருகன்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

செங்கல்பட்டு

Call : +91-

அமுதவல்லி, சுந்தரவல்லி எனும் இரு பெண்களும் திருமாலின் கண்களிலிருந்து தோன்றியவர்கள். இவர்களின் அடுத்த பிறவியில் அமுதவல்லி, இந்திரனின் மகளாகப் பிறந்து, தெய்வசேனை எனும் பெயரில் வளர்ந்து, முருகனை மணந்தாள். சுந்தரவல்லி, ஒரு மான் வயிற்றில் பிறந்தாள். மான், குழந்தையை, வள்ளிக்கிழங்கு அகழ்ந்ததோர் குழியில் இட்டது. இப்பகுதியை ஆண்ட வேடுவர் தலைவன், நம்பிராஜன், குழந்தையை குழியிலிருந்து கண்டெடுத்து, வள்ளி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். வள்ளல் குணமிருப்பதால், வள்ளி என பெயரிட்டான் போலும். தினைப்புனம் காத்து வந்த வள்ளியிடம், வேடனாக வந்த குமரன், விளையாடுவதும், தேன்-தினைமாவு வாங்கி சாப்பிடுவதுமாக இருந்து வந்தார். வயதானவனாகவும், விருத்தனாகவும், யானையை வரவழைத்து வள்ளியை பயமுறுத்தி, தஞ்சமடையச் செய்பவனாகவும், வேங்கை மரமாக மாறியும் - முருகன் திருவிளையாடல் செய்த ஸ்தலம் என்பதாக வரலாறு. வள்ளி தினைப்புனம் காத்த பரண்கள், மஞ்சள் நீர்ச்சுனை, விநாயகர் யானை வடிவம் கொண்டு பயமுறுத்திய இடம், முருகனின் தாகம் தணித்த சுனை, ஏழு நாற்கால் மண்டபங்கள் ஆகியவற்றை மலை மீது காணலாம். யானை போன்ற தோற்றத்தில், தானே இயற்கையாக உருவான பாறை கணேஷ்கிரி - வள்ளித் திருமணத்திற்கு கணேசர் உதவி புரிந்த இடம், இங்கு காணலாம். அர்த்த ஜாமத்தில் தேனும்-தினைமாவும் நைவேத்தியம் செய்கின்றனர். திருமாலின் பாதம் பொதித்த சடாரியை, பக்தர்களுக்கு சாத்தும் சம்ப்ரதாயம் இருக்கின்றது.
குன்றுதோறாடலில் ஆறாவது இடம். 444 படிக்கட்டுகளைக் கொண்ட மலையில் அமைந்துள்ள குடைவரைக் கோவில். மலையடிவாரத்தில் ஒரு கோவிலும், திருக்குளமும் இருக்கின்றன. இங்கு உற்சவ மூர்த்தியை தரிசிக்கலாம். மலை மீதுள்ள மூலஸ்தானத்தில் சுப்ரமண்யர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். நின்ற திருக்கோலம். வள்ளி மற்றும் தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். பெரிய பாறை மீது குகை போன்ற அமைப்புடையதாக உள்ளது பிரதான கருவறை. தனிக்குகையில் கையில் கவண் வில்லுடன் வள்ளி காணப்படுகிறாள். சந்நிதியின் நேரே நின்று பார்த்தால் முருகனை மட்டுமே தரிசிக்கலாம். வலப்புறமிருந்து பார்த்தால் வள்ளியையும், இடப்புறமிருந்து பார்த்தால் தெய்வயானையையும் தரிசிக்கலாம். வரசித்தி விநாயகர், வீரபத்ரர், நவ வீரர்கள், அருணகிரிநாதர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பாறை சுவற்றின் புடைப்பு சிற்பமாக, வள்ளி தன் கைகளில், கவண்-வில் கொண்டு, கிளிகளை விரட்டும் பாவனையிலும், தினைப்புனம் காக்கும் தோரணையிலும் காட்சி தருகின்றாள். மலைக் கோவிலிலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்தில் வள்ளிமலை ஸ்வாமிகள் சமாதியை காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.