அருள்மிகு ஸ்ரீ பிருத்வீச்வரர் திருக்கோயில் (பள்ளிபட்டு)

God Name : ஸ்ரீ பிருத்வீச்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

ராஜசிம்ம பல்லவ மன்னன் இவ்வு+ரின் இயற்கையான அழகில் மனதைப் பறிகொடுத்து, இங்கு கைலாசநாதருக்குக் கோயில் ஒன்று எழுப்ப முடிவு செய்தான். காஞ்சியில் உள்ளது போன்றே கோயில் கட்டவும், பஞ்சபூத ஸ்தலங்களை நினைவுறுத்தும் வகையில், ஸ்ரீ பிருத்வீச்வரர் எனப் பெயரிடவும் முடிவு செய்து அதன்படி நிர்மாணித்த கோயில் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இவ்வு+ரிலுள்ள ரஜதகிரி எனப்படும் வெள்ளி மலையில், மூலவராக சோமநாதேச்வரரும், அம்பாள் மரகதவல்லியும் எழுந்தருளியுள்ளனர்.
மூலவர்: ஸ்ரீ பிருத்வீச்வரர்் அம்பாள்: புவனேஸ்வரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி தரிசனம் தருபவர் ஸ்ரீ பிருத்வீச்வரர். இது 16 பட்டைகளுடன் கூடிய ஷோடஸ தாரா லிங்கம். அழகிய திருமேனி கொண்டது. சந்திரகலா லிங்கம் அல்லது சாயுஜ்ய லிங்கம் என்று அழைப்பர். சந்திரனின் 16 கலைகளைக் கொண்டுள்ளதால் சந்திரகலா லிங்கம் என்பர். தாரா பாத்திரத்தை வைத்து அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக தீர்த்தம் 16 பட்டைகளின் வழியே பல கிளைகளாகப் பிரிந்து வழியும் காட்சி சிறப்பானது. குளிர்ச்சி மிக்க கல்லில் வடிவமைக்கப்பட்ட லிங்கம் என்பதால் உச்சி வேளையில் தொட்டாலும் சில்லென்றிருக்கும். தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பிகை புவனேஸ்வரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சுவாமி மற்றும் அம்பாளின் உற்சவ மூர்த்தங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. பெரிய திருவுருவமாக காட்சி தரும் விநாயகப் பெருமான், பன்னிரு கரங்களில் ஆயுதங்களுடன் ஆறுமுகப் பெருமான் மற்றும் அனேக ஐம்பொன் சிலைகளை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.