ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி திருக்கோவில், காக்களூர்
God Name : ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஸ்ரீ ராகவேந்திரரின் முற்பிறப்பான வியாஸராஜர், தனது சஞ்சாரத்தின்போது, 732 ஆஞ்சநேய சிலா மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து கொண்டே வந்தார். அவ்வாறு பிரதிஷ்டை செய்த மூர்த்தங்களுள், காக்களூர் மூர்த்தியும் ஒன்று.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி வடக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். நெடிதுயர்ந்த, ஆஜானுபாகு திருமேனி. சுமார் பத்தடி உயரம் இருக்கும். திருவுருவம் மேலும் வளர்ந்து கொண்டே இருப்பதாக கூறுகின்றனர். வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் சௌகந்திகா புஷ்பத்துடனும் காட்சி தருகிறார். தலையில் குடுமி, கழுத்தில் நவரத்ன ஹாரம், இரு கரங்களிலும் கங்கணங்கள், செம்மை நிறம் என இவரது அழகை வர்ணித்துக் கொண்டே இருக்கலாம். ஓங்கார வடிவத்தில் வால், வால் சுருண்டு தலைக்கு மேல் இருக்கின்றது. அதில் மணி கட்டப்பட்டுள்ளது. அரசமரம் மற்றும் வேம்பு மரம் இரண்டும் பிணைந்து காணப்படும் இடத்திலிருந்து தரிசனம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால் பலிக்கிறது என கூறுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.