அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில் (திருப்பாசூர்)
God Name : வாசீஸ்வரர் - உற்சவர் சோமாஸ்கந்தர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மது-கைடப அசுரர்கள், பிரம்மாவிடமிருந்து வேதங்களை அபகரித்து, கடலுக்கடியில் ஒளித்து வைத்த போது, மத்ஸ்ய அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அசுரர்களை அழித்து, வேதங்களை மீட்டார். அசுர சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க இத்தலத்திற்கு வந்து, லிங்கப்ரதிஷ்டை செய்து, வழிபட்டார் என ஸ்தல வரலாறு.
காலப்போக்கில், பூமியில் புதையுண்டு, சுற்றிலும் மூங்கில் காடு வளர்ந்தது. மூங்கில் காட்டில் உள்ள பெரிய புற்று ஒன்றின் மீது, தினமும் பசு ஒன்று தானாக வந்து, பாலைப் பொழிவதை வழக்கமாக கொண்டதாம். இதைக் கண்ணுற்ற வேடர்களில் சிலர், புற்றை கோடரியால் கிளறி பார்த்தனர். புற்றின் அடியிலிருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. லிங்கத் திருமேனியில் கோடரி வெட்டு தழும்பும் ஏற்பட்டது.
திரு - பாசு - ஊர் திருப்பாசூர். பாசு என்றால் மூங்கில் என்று பொருள். வேய் என்றாலும் மூங்கில் என்றே அர்த்தம். மூங்கிலடியிலிருந்து சுயம்புவாக தோன்றியருளியதால் பாசூர் நாதர் என்றும் வேயின்ற நாதர் என்றும் அழைக்கின்றனர்.
சமணர்கள் ஒரு பெரிய பாம்பைப் பிடித்து குடத்தில் அடைத்து, கரிகால சோழனுக்கு அனுப்பி வைத்தனர். சிவபெருமான் அந்த பாம்பை எடுத்து ஆட்டியருளிய ஸ்தலம். கரிகால சோழன் இந்த கோவிலை கட்டி, இவ்விறைவனை வழிபட்டதாக வரலாறு.
தேவாரத் திருத்தலம்
மூலவர்: வாசீஸ்வரர், உற்சவர்: சோமாஸ்கந்தர், அம்பாள்: தங்காதலி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் வாசீஸ்வரர். சதுர பீட ஆவுடையார் மீது, கரடு முரடான லிங்க பாணம். லிங்கத் திருமேனியில், கோடரி வெட்டு அடையாளம் காணப்படுகிறது. சுயம்பு லிங்க மூர்த்தம். கிழக்கு பார்த்த சந்நிதி. கஜபிருஷ்ட விமான அமைப்பு.
துவார பாலகர்களின் தோற்றம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் அற்புதமாக அமைந்துள்ளன.
இடப்புறமாக சற்று நகர்ந்தபடி, மூலவர் காணப்படுகிறார். அதனால் ஸ்வாமியை கையால் தொடுவதில்லை. அலங்காரங்கள் பாவனையாகத்தான் செய்கின்றனர். தீண்டாத் திருமேனி என்பர்.
திருமால் பிரதிஷ்டை செய்த லிங்கம். இவருக்கு - பாசூர்நாதர், வேயின்ற நாதர் என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு.
தனி சந்நிதியில், கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார் அம்பாள் தங்காதலி. இவருக்கு மோகனாம்பாள், பசுபதி நாயகி, பனைமுலை நாச்சியார் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அம்பாள் இறைவனை பூஜித்த அழகைப் பார்த்து மயங்கிய சந்நிதியின் முன்பாக ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்துள்ளனர். ஸ்ரீ சக்கரத்திற்கே முதல் பூஜை.
விநாயகர் சபை:
ஒரே இடத்தில் ஏகாதச (11) விநாயகர்களை தரிசிக்கலாம். மும்மூன்று விநாயகர்களாக மேலும் - கீழும் இரண்டு வரிசை. மற்றோர் தனி வரிசையில் ஐந்து விநாயகர்கள். நடுவில் வலம்புரியார் கொலுவிருக்க, அடுத்து நர்த்தன கணபதி. பார்த்துக் கொண்டே இருக்க தூண்டும் அழகு.
சிவாலய கோஷ்ட மூர்த்தங்களுள் விஷ்ணு துர்க்கை வித்தியாசமாக காட்சி தருகிறாள். திருவடிகளருகே மகிஷாசுரன் இல்லை. வள்ளி - தெய்வயானை உடனாய செல்வ முருகன், சோமாஸ்கந்தர், சப்த கன்னியர்கள், வீரபத்ரர், ஐயப்பன், நடராஜர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
இடி, திரிசூலம், உடுக்கை, பாசம் ஏந்தியும், வாகனத்துடனும் காணப்படும் ஸ்வர்ண பைரவர் அழகாக இருக்கிறார்.
நடனமாடும் விலங்கு பூட்டிய காளி, வில்லேந்திய முருகன் ஆகிய திருவுருவங்கள் அபூர்வமானவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.