அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோவில் (பூண்டி)
God Name : மூலவர்: ஊன்றீஸ்வரர், உற்சவர்: சோமாஸ்கந்தர்.
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
சங்கிலி நாச்சியாரை மணக்க ஆசைப்பட்ட சுந்தரர், திருவொற்றியூரில், தியாகேசரையே தூது போகும்படி வேண்டி நிற்கிறார். ஏற்கனவே சுந்தரரின் திருமணத்தை திருவெண்ணைநல்லூரில் தடுத்து நிறுத்திய இம்முறை சங்கிலியாரிடம் தூது போனார்.
"ஆரூரில் ஒருத்தி இருக்க (பறவை நாச்சியார்), திருவொற்றியூரில் இருக்கும் நான் எப்படி மணப்பேன்?" என்று சிவனாரிடம் சங்கிலி நாச்சியார் வினவினாள். "உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் வாங்கிக் கொள்" என்று யோசனை கூறுகிறார் சிவனார்.
இந்த விபரங்களை அறிந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரிலேயே தங்கி விட்டால், பறவை நாச்சியாரின் கதி என்ன ஆவது? - தவிர திருவாரூர் தியாகேசனைப் பார்க்க முடியாமல் போய் விடுமே என்றெல்லாம் எண்ணிய சுந்தரர், இறைவன் லிங்கத் திருமேனியிலிருந்து விடுபட்டு, மகிழ மரத்தடி சென்று விட வேண்டும் என்றும், சத்தியம் செய்து முடித்ததும் மீண்டும் சந்நிதிக்கே திரும்பலாம் என்றும் கோரிக்கை விடுக்கிறார்.
இந்த சம்பாஷணையை சங்கிலி நாச்சியாரிடம் ஒப்பித்து விட்டார் சிவபெருமான்.
மறுநாள், மணம் புரிய சென்ற சுந்தரரை, மகிழ மரத்தடியில் நின்று சத்தியம் செய்யும்படி கூறிய சங்கிலி நாச்சியார், அதன்படி மகிழ மரத்தடியில் நின்று சத்தியம் வாங்கிக் கொண்டார். சிவபெருமானும் பிரத்யட்சமாகி அவர்களை வாழ்த்தினார்.
சங்கிலியாரை மணந்து திருவொற்றியூரிலேயே தங்கி இருந்த சுந்தரருக்கு, திருவாரூர் நினைவுக்கு வரவே, திருவொற்றியூர் விடுத்தார். எல்லையை தாண்டியதும், செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால், கண் பார்வையை இழந்தார்.
வழிப்போக்கர்களின் உதவியுடன், தட்டுத் தடுமாறி, இவ்வூருக்கு (வெண்பாக்கத்திற்கு) வந்து சேர்ந்தார் சுந்தரர். "பிழைகளை பொறுத்து மன்னிக்காமல், கண் பார்வையை மறைத்து விட்டாயே - நீ இருக்கிறாயா கோவிலுக்குள்?" என சுந்தரர் கேட்க, "உளம் போகீர்" என அசரீரி ஒலித்தது. "ஆமாம் இருக்கிறேன், போய் வருகிறாயா?" என்று பொருள். "உனக்கு உதவியாக இருக்க, இந்த ஊன்றுகோலை வைத்துக் கொள்" என்கிறார் இறைவன்.
"கண் பார்வை கேட்டால் ஊன்று கோலை தருகிறாயே" என ஊன்றுகோலை திரும்ப வீசுகிறார் சுந்தரர். அது நந்தியின் மீது பட்டு, நந்தியின் வலது கொம்பு உடைந்து விடுகிறது.
"உளம் போகீர்" என இறைவன் கூறியது, உளம்பூதூர் என்றாகி, பின்னர் விலாம்பூதூர் என்று மருவியதாகக் கூறப்படுகிறது. தேவாரக் காலத்தில் ஆவணங்களில், கோவில் இருந்த இடம், திருவிலாம்பூதூர் என்று உள்ளது. சுந்தரர் குறிப்பிட்ட இடம் திருவெண்பாக்கம். தற்போதைய பெயர் பூண்டி.
ஸ்வாமிக்கும்-அம்பாளுக்கும் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால், கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: ஊன்றீஸ்வரர், உற்சவர்: சோமாஸ்கந்தர், அம்பாள்: மின்னலொளியம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் ஊன்றீஸ்வரர். வட்ட வடிவ ஆவுடையாருடன் காட்சி தரும் அழகிய திருமேனி. சுயம்பு மூர்த்தம். இவருக்கு ஆதார தண்டேஸ்வரர், வெண்பாக்கநாதர் என்றெல்லாம் திருநாமங்களும் உண்டு. கிழக்கு நோக்கிய சந்நிதி.
மூலவர்க்கு முன்னால், மூலவரை பார்த்தபடி, மூடிய கண்களுடனும், ஊன்றிய கோலுடனும் நிற்கின்றார் சுந்தரர்.
தெற்கு பார்த்த தனி சந்நிதியில், நின்ற திருக்கோலத்தில், எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள் மின்னலொளியம்மை. சதுர் புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனி.
ஒரே இடத்தில் நின்றபடியே, ஸ்வாமி மற்றும் அம்பாளை, ஒருசேர தரிசிக்கும் வகையில், சந்நிதியை அமைத்துள்ளனர்.
பார்வை போனதால் நிலை குலைந்து தடுமாறிய சுந்தரர்க்கு, ஊன்றுகோல் தந்து உதவிய இறைவன் என்பதால் இவர்க்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர். பார்வை கெட்டு, படலம் படர்ந்த சுந்தரரின் கண்களுக்கு மின்னலாக தோன்றி வழி காட்டிய அம்பாள் மின்னலொளியம்மை என அழைக்கப்படுகிறாள்.
சிவாலய கோஷ்ட மூர்த்தங்களுள், வித்தியாசமாக காட்சி தருபவர் லிங்கோத்பவர். இவரது திருமேனியில் கூடுதலாக தாழம்பூ காணப்படுகிறது.
வலம்புரி விநாயகர், அஷ்ட புஜங்களுடன் கூடிய கால பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வலக் கொம்பு ஒடிந்த நந்தி பார்க்க அழகாக இருக்கின்றது.
முன்பு இருந்த கோவில், தண்ணீரில் மூழ்கி விட்டபடியால், எல்லா சிலைகளையும், கல்வெட்டுக்களையும், பூண்டி எனும் இவ்வூருக்கு இடம் பெயர்த்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்துள்ளனர். 1968ல் இந்தக் கோவிலைக் கட்டியதாகக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.