அருள்மிகு ச்ருங்கீஸ்வரர் திருக்கோயில் (மப்பேடு)
God Name : ச்ருங்கீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஸ்தல வரலாறு: திருவாலங்காட்டில் நடந்த நடனப் போட்டியில், விஷ்ணுவின் அம்சமான ச்ருங்கி என்ற ரிஷபம் வாத்ய இசையில் ஒன்றி, மத்தளம் வாசிப்பதிலேயே கவனம் செலுத்தியதால், நடனத்தை காண முடியாமல் போய் விட்டது. இதற்காக மனம் வருந்தியது சிருங்கி. இந்த ஸ்தலத்திற்கு வந்து, இவ்விறைவனை பூஜித்து மகிழ்ந்தது ச்ருங்கி. இதனால் மகிழ்ந்த இறைவன் பிரத்யட்சமாகி, நடனம் ஆடி, ச்ருங்கியின் ஆசையை நிறைவேற்றி வைத்தார் என ஸ்தல வரலாறு. இதனால் இவ்விறைவனை ச்ருங்கீஸ்வரர் என்று அழைக்கின்றனர். இத்தலத்தில் ஆஞ்சநேயர் வீணை வாசித்துள்ளார் என ஸ்தல வரலாறு மேலும் தெரிவிக்கின்றது. இன்றளவும் இசைக்கலைஞர்கள் இங்குள்ள பாலீஸ்வரர் மற்றும் தீர்த்தீஸ்வரர் முன்னால் அமர்ந்து இசைக்கின்றனர். எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடைய, நந்தி மண்டப பீடத்தில் அமர்ந்து, தியானம் செய்வதாக கூறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் ச்ருங்கீஸ்வரர். ஒளி வீசும் அழகிய சிவலிங்கம். தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள் அம்பிகை புஷ்ப குஜாம்பிகை. விநாயகர், முருகன், திருமால் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.