அருள்மிகு பள்ளிகொண்டேஸ்வரர் திருக்கோவில் (சுருட்டப்பள்ளி)

God Name : வன்மிகீசர் எனப்படும் வால்மீகீஸ்வரர், பள்ளிகொண்டேஸ்வரர், கௌரி ஆலிங்கன தட்சிணாமூர்த்தி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கும் பணியில் அசுரர்களும், வாசுகி கக்கிய கொடிய விஷம் வெளிப்பட்டதைக் கண்டு பயந்தனர். அவர்களுக்கு அமிர்தம் கிடைக்கவும், ஆலகால விஷத்தின் கொடுமையிலிருந்து காக்கவும், சிவபெருமான் அந்த விஷத்தை ஒரு பந்தாக உருட்டி, வாயில் போட்டுக் கொண்டார். இதனால் கவலையுற்ற பார்வதி, அந்த விஷத்தை அவரது தொண்டையிலேயே நிறுத்தி வைத்தார். விஷத்தை உண்ட களைப்பில் இறைவன் சுருண்டு படுத்துக் கொண்ட ஸ்தலம் சுருட்டப்பள்ளி. களைப்பு நீங்கி எழுந்ததும், கவலையுடன் இருந்த அனைவருக்கும் ஆனந்த தாண்டவம் ஆடிக் காண்பித்தார் சிவபெருமான். அன்றைய தினம் மஹா பிரதோஷ தினம். நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கிடையே ஆனந்த தாண்டவம் ஆடியதால் முதல் பிரதோஷ வழிபாடு நடந்த ஸ்தலம் இதுவென்பர். (தசமி திதியன்று பாற்கடல் கடையப்பட்டது. மறுநாள் ஏகாதசியன்று சிவபெருமான் விஷத்தை அருந்தினார். அதற்கு மறுநாள் துவாதசி. துவாதசியன்று பிரதோஷ வேளையில், நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே, சனிக்கிழமை. இந்த நடனத்தை சம்பு நடனம் என்பர்.) ஆலகால விஷத்தின் வீரியத்தால் சிவபெருமான் இங்கு பள்ளிகொண்டேஸ்வரராகப் படுத்திருப்பதைப் பார்க்க வந்த எல்லா தெய்வங்களும் தம்பதி சமேதரராய் வந்திருப்பது கூடுதல் விசேஷம். இத்தனை சிறப்புக்களைக் கொண்ட இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு தாம்பத்ய ஒற்றுமை மேலோங்கும் என்பார்கள். ராமலிங்கேஸ்வரர் - பர்வதவர்த்தினி, வால்மீகீஸ்வரர் - மரகதாம்பிகை, தாம்பத்ய தட்சிணாமூர்த்தி, சித்தி-புத்தி விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், பூரணா-புஷ்களா சஹித சாஸ்தா, மனைவியுடன் குபேரன் என எல்லா தெய்வங்களுமே தம்பதி சமேதரராகக் காட்சி தருகின்றனர். சங்கநிதி-பத்மநிதி இருவரும் தத்தம் மனைவிகளுடன் காணப்படுகின்றனர் (வசுந்தரா, வசுமதி). தட்சனின் யாகத்தின்போது தனது ஸ்தூல உடலை நீத்த தாட்சாயிணி எனப்படும் உமையவள், மீண்டும் ஹிமவான் மகளாகப் பிறந்து, சிவபெருமானை அடைய கடுந்தவம் மேற்கொண்டாள். அப்படி தவமியற்றி சிவபெருமானைத் தன் பதியாக அடைந்த உமையவள், தன் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில் சிவபெருமானை ஆலிங்கனம் செய்து கொண்டிருக்கும் ஒரு திருமேனியே கௌரி ஆலிங்கன தட்சிணாமூர்த்தி என்று புராணக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கையில், கோவிலைக் காணலாம். கோவிலுக்குச் செல்லும் முன்பாகவே, வண்ண சுதை சிற்பமாகப் படுத்திருக்கும் அழகிய நந்தியைக் காணலாம். மிகப் பெரிய திருமேனி. நுழைவாசல் வழி உள் சென்றதும், இடது பக்கமாக மூன்று பிரதான கருவறைகள், வலது பக்கமாக ஒரு கருவறை. முதல் கருவறையில் மூலவராக எழுந்தருளி தரிசனம் தருபவர் வன்மிகீசர் எனப்படும் வால்மீகீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். வால்மீகி முனிவர் பூஜித்து வழிபட்டதால் வால்மீகீஸ்வரர் எனும் திருநாமம். அடுத்துள்ள கருவறையில் அன்னை மரகதாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். புன்னகை தவழும் திருமுகம், மடிசார் புடவை கட்டி, சௌந்தர்யமாகக் காட்சி தருகின்றாள். வாசலில் சங்கநிதி - பதுமநிதி சிலைகள். கருவறைக்குள் காமதேனுவும், கற்பக விருட்சமும் அன்னையின் அருகே இடம் பெற்றுள்ளன. மூன்றாவது கருவறையில் மூலவராக ராமலிங்கேஸ்வரர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். ஸ்ரீ ராமர் வழிபட்ட லிங்கம். வால்மீகி முனிவர்க்கு அளித்த வாக்குறுதியின்படி, ராவண வதம் முடித்து திரும்புகையில், வால்மீகி முனிவர்க்கு தரிசனம் தந்துவிட்டு, இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டதால், ராமலிங்கேஸ்வரர் எனப் பெயர் கொண்டதாகக் கூறுவர். பர்வதவர்த்தினியையும் தரிசிக்கலாம். ஸ்ரீ ராமர், சீதா தேவி, லக்ஷ்மணன், ஹனுமன், மற்றும் லவ-குசா ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். பிரகார வலச்சுற்றில் - சாளக்ராம கணபதி, சித்தி - புத்தி விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், பூரணா - புஷ்களா சஹித சாஸ்தா, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், அன்னபூரணி, லட்சுமி, சரஸ்வதி, ராஜமாதங்கி, நால்வர், வால்மீகி, தத்தாத்ரேயர், சப்த மாதர்கள், ஜ்வரஹரேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பிராம்மி - அன்னம், மகேஸ்வரி - நந்தி, கௌமாரி - மயில், வைஷ்ணவி - கருடன், வாராஹி - பன்றி, இந்திராணி - யானை, சாமுண்டி - எருது, என சப்தமாதர்களும் வாகனங்களுடன் எழுந்தருளியிருப்பதை இத்தலத்தில் பார்க்கலாம். ஏகபாத த்ரிமூர்த்தி - பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் ஐக்யமாகக் கருதப்படுபவர், மற்றும் தாம்பத்ய தட்சிணாமூர்த்தி ஆகிய விசேஷ மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். உமா தேவியை மடியில் இருத்திய தட்சிணாமூர்த்தி மிகவும் அழகான திருவுருவம். வன்மிகீசர் கருவறையின் தென்புற கோஷ்டத்தில் தாம்பத்ய தட்சிணாமூர்த்தி எனப்படும் கௌரி ஆலிங்கன தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். அவரது இடது தோளின் பின்புறம், தோளைப் பற்றியவாறும், அவரது திருமுகத்தை ஏறிட்டுப் பார்ப்பது போலவும் காணப்படும் உமையவளின் திருவுருவம், தட்சிணாமூர்த்தியின் அழகுக்கு அழகு சேர்க்கிறது. பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் எதிரே உள்ளனர். வீணை இல்லாமல், தட்சிணாமூர்த்தியின் முன்பாக அமர்ந்து பாடம் கேட்கும் ஞான சரஸ்வதி போன்ற, அரிய சிற்பங்களைக் கண்டு மகிழலாம். வலது பக்கமுள்ள மூலஸ்தானத்தில் பள்ளிகொண்டேஸ்வரர் போக சயனத்தில் சயனித்து, தரிசனம் தருகின்றார். பிரம்மாண்டமான அழகிய திருமேனி. விஷபாஹரணர் என்றும் திருநாமம். இவரது சிரசை, தன் மடியில் இருத்திக் கொண்டு, ஒரு தாயின் பெருமிதத்துடன் காணப்படுகிறாள் அன்னை பார்வதி. பள்ளிகொண்டேஸ்வரரைச் சுற்றிலும் பிரம்மா, விஷ்ணு, சூரிய-சந்திரர்கள், விநாயகர், தேவியர்களுடன் முருகன், இந்திரன், குபேரன், தும்புரர், ப்ருகு முனிவர், அகஸ்தியர், புலஸ்தியர், கௌதமர், மார்க்கண்டேயர், வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்ரர் என அனேக திருவுருவங்களைக் காணலாம். நவகிரகங்கள் இல்லை. இறைவன் பள்ளிகொண்டிருப்பதால், பிரதோஷத்தின் போது நடைபெறும் சோமசூக்த பிரதட்சிணம் இல்லாத ஸ்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.