அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில் (ஞாயிறு)

God Name : புஷ்பரதேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

பிரம்மதேவனின் சாபத்தால் நோயுற்ற சூரியன், தேவ குருவின் யோசனைப்படி தனது சாபத்தைப் போக்கிக் கொள்ள, சிவ வழிபாடு செய்யவும், அதற்குரிய ஸ்தலத்தை தேர்ந்தெடுக்கவும், முற்பட்டு தேடி வரலானான். இவ்வூர் குளத்திலுள்ள தாமரைப்பூவில், ஓராயிரம் இதழ்கள் இருப்பதைக் கண்டு, அதிசயித்து, இதுவே உகந்த ஸ்தலம் என எண்ணி, குளத்திற்குள் இறங்கி, குளத்திலுள்ள செந்தாமரை மலரில், லிங்கமாக தோன்றினார். சூரியனின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான், அவனது சாபத்தையும், நோயையும், போக்கியருளினார். சாபத்தை நீக்கியருளியதற்கு நன்றிக்கடனாக சூரியன், அட்சய பாத்திரத்தை நிலைப்படுத்தி அன்னதானம் செய்தான் என ஸ்தல வரலாறு. சோழ மன்னன் ஒருவன் தடாகத்தில் மின்னிய தாமரை மலரில் மயங்கி, அதை பறிக்க முற்பட்டதில், அவனது பார்வை பறி போனது. தாமரைக்குள் லிங்கம் இருப்பதை உணர்ந்த மன்னன், சிவ அபராதம் செய்தமைக்காக வருந்தினான். செய்த தவற்றிற்கு வருந்தினமையால், சுந்தரரின் மனைவி சங்கிலி நாச்சியார் பிறந்த ஊர். கண்வ மகரிஷி இவ்வூரின் அருகே ஆஸ்ரமம் ஒன்றை அமைத்து சிவபெருமானையும், சூரியனையும் வழிபட்டு முக்தி பெற்றார் என குறிப்பொன்று கூறுகிறது. பல் நோய் தீர, இவரை வழிபடுகின்றனர். பாஸ்கர க்ஷேத்ரம்.
மூலவர்: புஷ்பரதேஸ்வரர், அம்பாள்: கருணாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக, பஞ்சாசனத்தில், எழுந்தருளி அருள் புரிகின்றார் புஷ்பரதேஸ்வரர். திருமேனியில் வெட்டுத் தழும்பு அடையாளம் உள்ளது. மூலவரின் சந்நிதிக்கு நேர் எதிரே சூரிய பகவான் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். சித்திரை மாத முதல் நாளிலிருந்து, சூரியனின் ஒளிக்கதிர்கள், ஸ்வாமி மீது படர்ந்து, சூரிய பூஜை செய்கின்றன. வலப்பக்கமாக உள்ள சந்நிதியில் அம்பாள் கருணாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். இவருக்கு ஸ்வர்ணாம்பிகை என்ற பெயரும் இருக்கிறது. அம்பாள் சந்நிதியின் முன்புள்ள பீடத்தில், ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். சந்நிதிகளுக்கு முன்பாக உள்ள மண்டபங்களை, சிற்ப வேலைப்பாடுகளுடைய தூண்கள் தாங்குகின்றன. பிரகார வலச்சுற்றில் - கமல விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், காலபைரவர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், சங்கிலி நாச்சியார் ஆகியோரின் திருவுருவங்களை தனித்தனி சந்நிதிகளில் தரிசிக்கலாம். எல்லா சந்நிதிகளும் கிழக்கு பார்த்தே இருப்பது சிறப்பு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.