அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில்
God Name : ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஸ்தல வரலாறு:
காகபுஜண்டர் - வகுளா தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்து, பதினெண் சித்தர்களில் ஒருவராகவும், மகரிஷியாகவும் வாழ்ந்த ரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம்.
பிரம்மா அரணிக்கட்டையை கடைந்தபோது தோன்றிய அரணி நதிக்கரையில், கிருஷ்ணர் அஸ்வத்த மரமாக நிற்கிறார். அந்த இடத்தை தேர்ந்தெடுத்து, தவம் செய்யலானார் ரோமச மகரிஷி. இவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பிரத்யட்சமானார். தனக்கென்று வரம் ஏதும் கேளாமல், இத்தலத்தில்...
அத்ரி முனிவரின் புத்ரனான முகுந்த முனிவரும் இத்தலத்தில் தவம் புரிந்தார். அரணி நதிக்கரையில்...
கால பைரவர் வடிவில் பிரத்யட்சமாகி தரிசனம் தந்த இவரை வழிபடுவோரை காலனின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டினார் முகுந்த முனிவர்.
ஆயுளுடன் வாழ வழி காட்டும் அரன் உறையும் ஸ்தலம் என்பதால், அரியதுறை எனப் பெயர் கொண்டதாக குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். சதுர பீட ஆவுடையும், அழகிய பாணமும் கொண்ட ஆகர்ண லிங்கம். சத்யோஜாத முகம் கொண்டு கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றார்.
தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் மரகதவல்லி எழுந்தருளியுள்ளார். தனது இடது பாதத்தை சற்று முன்னே வைத்து நின்ற திருக்கோலம்.
அம்மையப்பனை ஒருசேர தரிசிக்கும் விதத்தில் அமைந்துள்ள சந்நிதிகள். இப்படி ஒருசேர தரிசனம் செய்பவர்களுக்கு தம்பதி ஒற்றுமை கிட்டும் என்பர்.
ஓங்கார பிரகாரம். ஓங்கார பிரதக்ஷணம்.
32 சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பிள்ளையார், முருகன் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. சுயம்பு பைரவர், பிரதிஷ்டை செய்யப்பட்ட பைரவர் என இரண்டு பைரவர்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.