அருள்மிகு பாலசுப்ரமண்யர் திருக்கோவில், ஆண்டார்குப்பம்

God Name : பாலசுப்ரமண்யர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

பிரணவத்தின் பொருளை விவரிக்க முடியாத பிரம்மனை முருகன் தரையில் குட்டி, அவரைச் சிறை பிடித்த ஸ்தலம் இது என்ற புராணத் தொடர்பு கொண்ட கோவில். இதை விவரிக்கும் சிற்பங்கள் பல கோவிலில் காணலாம். 16 கால் மண்டபத்தில் மூலவருக்கு நேர் எதிரே ஒரு புடைப்புச் சிற்பம் உள்ளது - அதில் விரிந்த தாமரைப் பூவின் நடுவே வேல். தூரத்திலிருந்து உற்று நோக்கினால் பிரம்மன் தெரிவார். ஒரே சிற்பத்தில் இரண்டு காட்சிகள். முருகன், அவரது பின்னால் வீரபாகு இருவரும் நிற்க, பிரம்மன் விழித்துக் கொண்டிருக்க, முருகன் பிரம்மனின் தலையில் இடக் கையால் குட்டும் காட்சி தூண் ஒன்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சூரபத்மனிடம் போரிடும்போதுதான் முருகன் அன்னையிடம் வேல் பெற்றான். சூரனை வதைத்த பின்னரே மயில் வாகனம் கிடைத்தது. அதன் பின்னரே இரு தேவியர்களை மணந்தான். ஆகையால் இங்கு வேலும் இல்லை, மயிலும் இல்லை, இரு தேவியர்களும் இல்லை.
தச்சூர் செல்லும் வழியில், திருப்பத்திலிருந்தே கோவிலின் கோபுரம் நன்றாகத் தெரியும். இது கிழக்கு நோக்கிய கோபுரம். நான்கு பிரகாரங்கள், பஞ்ச கோட்டங்கள், மண்டபங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கோவில் இது. 16 கால் மண்டபத்தின் மேற்கில், கிழக்கு நோக்கிய மூன்று சந்நிதிகள் உள்ளன: நடுவே பாலசுப்ரமண்யர் சந்நிதி, வலப்பக்கம் விநாயகர் சந்நிதி, இடப்பக்கம் காசி விஸ்வநாதர் சந்நிதி. 16 கால் மண்டபத்தின் வடக்கில், தெற்கு நோக்கிய மூன்று சந்நிதிகள் உள்ளன: நடுவே உற்சவர் சந்நிதி, வலப்பக்கம் காசி விசாலாட்சி சந்நிதி, இடப்பக்கம் நடராஜர் சந்நிதி. மூலவரான பாலசுப்ரமண்யர், ஆறடி உயரம் கொண்ட நெடிதுயர்ந்த திருமேனி. கரங்களை இடுப்பிலும், தொடையிலும் வைத்திருக்கிறார். கைகளில் வீரக் காப்புகள். அகன்ற நெற்றியில் திருநீறு. கருணை ததும்பும் கண்கள், சாந்தமான முகத்துடன் தரிசனம் தருகின்றார். எதிரில் மந்திர யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. காலையில் பாலசுப்ரமண்யராகவும், பகலில் இளைய (வாலிப) சுப்ரமண்யராகவும், மாலையில் முதிய சுப்ரமண்யராகவும் - மூன்று வடிவில் தரிசனம் தருகின்றார். முன்னாலுள்ள மயில் மண்டபத்தில், வாயில் பாம்பைக் கவ்விய மயிலின் கழுத்துப் பகுதியைத் தாங்கும் சிங்கம் போன்ற சிற்பங்கள் அற்புதமான படைப்புகள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.