அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில் (எருமைவெட்டிப்பாளையம்)

God Name : ஸ்ரீ ராமர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருச்சிராப்பள்ளி

Call : +91-

இத்தலத்திலுள்ள மலையில், ஸ்ரீ ராமர் சீதையின் மடியில் கண்ணயர்ந்து இருக்கும்போது, இந்திரனின் புத்திரன் புத்தி கெட்டுப் போய், காக உருவம் கொண்டு, சீதையிடம் வந்தான். இதைத் தெரிந்துகொண்ட ராமர், தர்ப்பையைக் கிள்ளி எறிந்து, பிரம்மாஸ்திரமாக ஏவினார். எல்லா லோகங்களிலும் ஓடி ஒளிந்த காகாசுரன், உயிர் பிச்சை கேட்டு, ராமரிடமே சரணடைந்தான். ராமரின் பாணம் அவனது ஒரு கண்ணைப் பறித்து ஓய்ந்தது என ஸ்தல வரலாறு கூறுகிறது. மகிஷத்தின் வடிவில் வந்த அசுரனை வதைக்க ஸ்ரீ ராமர் எய்த அம்புகள், நான்கு பெண் தெய்வங்களாக மாறி, அங்காளம்மனுக்கு உதவியாக இருந்து, மகிஷாசுரனை வதைக்க காரணமாயிருந்தமையால் மகிஷமர்த்தனபுரம் எனப் பெயருற்று, பின்னர் மருவி, இந்நாளில் எருமைவெட்டிப்பாளையம் என்றானது என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சிறிய மலை. ஏறுவதற்கு கல் படிக்கட்டுகள் வசதியாக உள்ளன. மூலஸ்தானத்தில் ஸ்ரீ ராமர், சீதா பிராட்டியை தனது மடியின் இடப்புறமாக இருத்தி, அணைத்த கோலத்தில், பத்மாசனமாக அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். கோதண்டராமரின் புஜபல பராக்கிரமத்தை வெளிப்படுத்தும் வண்ணம், அவரது பரந்து விரிந்த தோள்கள் காணப்படுகின்றன. இது பட்டாபிஷேக கோலம் என்பர். ஸ்ரீ ராமர் - சீதை இருவரின் திருவுருவங்களும் சாளக்ராமத்தில் உருவானவை என்பதால் மிகவும் அழகாக இருக்கின்றன. அருகே லக்ஷ்மணன் கையில் வில் ஏந்தி நிற்கின்ற அழகையும், பவ்யமான ஆஞ்சநேயரையும் காண கண் கோடி வேண்டும். நாராயணன் மற்றும் ஆழ்வாராதிகளை சேவிக்கலாம். வில்லேந்தும் விரல்களின் நளினம், மரவுரி போன்றவைகளை நுட்பமாக சிறந்த வேலைப்பாடுகளுடன் கொண்ட உற்சவ விக்ரகங்கள், கோபுரத்தில் காணப்படும் சுதைச் சிற்பங்கள் அனைத்தும் பேரெழில் கொண்டவை.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.