அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில், எருமை வெட்டி பாளையம்
God Name : ஸ்ரீ ஐமுர்த்தீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருச்சிராப்பள்ளி
Call : +91-
சீதா தேவியை துரத்தி வந்த மகிஷாசுரன் மீது ஸ்ரீ ராமர் ஒரு தர்ப்பையைக் கிள்ளி எறிந்தார். அவை நான்கு தேவதைகளாக மாறின. நான்கு கன்னிகளால் அவனுக்கு அழிவு என்று நிர்ணயித்திருந்தபடியால், அந்த நால்வரும் அவனைத் துரத்தினர். அங்காள பரமேஸ்வரி, பொன்னியம்மன், மரக்காலத்தம்மன், கை காத்தம்மன் என்ற நான்கு கன்னிகளில், அங்காள பரமேஸ்வரி அவனது எருமைத் தலையை வெட்டி சம்ஹாரம் செய்தாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி வடக்கு நோக்கி, அமர்ந்த கோலத்தில், சர்வாலங்கார பூஷிதையாக தரிசனம் தருகின்றாள். கருவறையின் வெளியே இருபுறமும் பிள்ளையாரும் முருகனும் எழுந்தருளியுள்ளனர். மற்றொரு மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஐமுர்த்தீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். வெட்டவெளியில் பாவாடைராயனைக் காணலாம். (சற்று தூரம் இறங்கி நடந்தால் உள்ள சிவாலயத்தில் வரமுத்தீஸ்வரரை தரிசிக்கலாம்.)
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.