அருள்மிகு கரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோவில் (திரு ஆயர்பாடி)

God Name : கரிகிருஷ்ணப் பெருமாள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

பரத்வாஜ மகரிஷிக்காக பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளியதாக கூறப்படுகிறது. ஆரணி நதியின் மணலில் புதைந்து இருந்த விக்ரஹங்களை கண்டெடுத்து, பிரதிஷ்டை செய்து கோவிலெழுப்பினர். இந்த விக்ரஹங்களின் அழகைக் கண்டு அதிசயித்த கரிகாலச்சோழன் இவ்வாலயம் எழுப்பியதாகவும், மன்னனின் பெயரை சேர்த்து கரிகிருஷ்ணன் எனப் பெயர் கொண்டதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலவர்: கரிகிருஷ்ணப் பெருமாள், தாயார்: சௌந்தரவல்லி. மூலஸ்தானத்தில் கரிகிருஷ்ணப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். வடக்கு பார்த்து நின்ற திருக்கோலம். வலது காலை ஊன்றியும், இடது காலை சிறிது மடித்தும், ஆதார பீடம் எதுவுமில்லாமல் இருப்பது வித்யாசமானது. வலது பக்கம் சாய்ந்தவாறு இருக்கும் திருமேனி. அழகிய கோசாலை கிருஷ்ணராக தரிசனம் தருகின்றார். பெருமாளுக்கு இடது பக்கமாக தாயார் சௌந்தரவல்லி எழுந்தருளியுள்ளார். கிழக்கு பார்த்த சந்நிதி. பெயருக்கேற்றபடி சௌந்தர்யமான திருவுருவம். நவநீத கிருஷ்ணன், சக்கரத்தாழ்வார், வேணுகோபாலன் ஆகியோரின் உற்சவ மூர்த்தங்களை சேவிக்கலாம். தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ள ஆழ்வாராதிகள், ராமாநுஜர், மணவாள மாமுனி, திருக்கச்சி நம்பிகள் ஆகியோரின் திருவுருவங்களையும், ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், சீதா தேவி, ஹனுமன் ஆகியோரின் திருவுருவங்களையும் சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.