அருள்மிகு திருவுடையம்மன் திருக்கோயில் (மேலூர்)
God Name : திருமணங்கீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
சிவபெருமானின் கண்களை, விளையாட்டாக மூன்று விநாடிகளுக்கு, பார்வதி தேவி மூடினாள். சிருஷ்டிகளுக்கு இதனால் இடைஞ்சல் உண்டாகுமென கோபம் கொண்ட சிவபெருமான் சபித்து விடுகிறார். சாப விமோசனம் வேண்டி, இத்தலம் வந்த பார்வதி, சரக்கொன்றை மரத்தடியில் தவமிருந்தாள். சிவசாபம் தீர தவமிருந்த பார்வதி முன் பிரத்யட்சமான இறைவன் அவளுக்கு சாப விமோசனம் அளித்து, மீண்டும் அவளை மணந்து கொள்கிறார். இச்சையுடன் மீண்டும் இத்தலத்தில் இச்சா சக்தியாக விளங்குகிறாள். செல்வத்திற்கு அதிபதியாக இருந்து, வேண்டுவோர்க்கு நற்பலன்கள் தருகிறாள். ஆதியில் புற்று உருவில் இருந்த தினமும் புற்றின் மீது பால் சொரியும் பசு ஒன்று அடையாளம் காட்ட, ஊர் மக்கள் அதை வெளிக்கொணர்ந்து, பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்னர் இந்த சுயம்பு லிங்கத்திற்கு திருமணங்கீஸ்வரர் எனப் பெயர் சூட்டி ஆலயம் எழுப்பியுள்ளனர். சக்தி பீடங்களுள் ஒன்று.
மூலவர்: திருமணங்கீஸ்வரர், அம்பாள்: திருவுடையம்மன். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளி அருள் புரிகின்றார் திருமணங்கீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். சதுர ஆவுடை மீது புற்று வடிவ லிங்கம். செப்பு மற்றும் வெள்ளி கவசம் சாத்துகின்றனர். திருநீறு பட்டை - ருத்ராட்ச அலங்காரம். இவருக்கு சுகந்தபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கருவறையின் வெளியே துவார கணபதியும் பாலமுருகனும் இடம் பெற்றுள்ளனர். கோஷ்டத்திலும், பிரகார வலச் சுற்றிலும் அநேக மூர்த்தங்கள் இடம் பெற்றுள்ளனர். தாடி - மீசையுடன் யோக நிலையில், ருத்ராட்ச மாலையுடன், பிரம்ம தேவரின் வித்தியாசமான தோற்றம் அழகாக இருக்கின்றது. நந்தியம் பெருமான் சற்று திரும்பியபடி காட்சி தருகிறார். ஸ்வாமி சந்நிதிக்கு வடக்கே உள்ள சந்நிதியில் திருவுடையம்மன் எழுந்தருளியுள்ளார். சக்தி பீடங்களுள் இச்சா சக்தியாக விளங்குகிறாள். ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் தங்கமாக ஜொலிக்கின்றாள். இளநங்கை வடிவம் கொண்டுள்ளார். திரிபுரசுந்தரி என்ற பெயரும் உண்டு. திருவுடையம்மனின் கருவறை விமானத்தில், பார்வதி-பரமசிவம், வைஷ்ணவி, காளி, சரஸ்வதி, தாட்சாயினி, பைரவி, விசாலாட்சி ஆகியோரின் திருவுருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு வெளியே பெரிய பாம்பு புற்று ஒன்றும் இருக்கின்றது. திருவுடையம்மனை காலை வேளையில் தரிசனம் செய்வது சிறந்தது. மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து மாம்பழ நைவேத்தியம் செய்வதும் விசேஷம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.