அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோவில் (திருவொற்றியூர்)
God Name : தட்சிணாமூர்த்தி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி மிகுந்த வரப்பிரசாதி என்பர். பத்தடி உயரம் கொண்ட மிகப் பெரிய திருமேனி. சதுர்புஜங்களுடன், ஆஜானுபாகு தோற்றம். மேற்கரங்களில் அக்னி, பாம்பு இவைகளுடனும், கீழ்க்கரங்களில் சின்முத்திரை மற்றும் ஓலைச் சுவடிகளுடனும் தரிசனம் தருகின்றார்.
முயலகன் மேற்கு நோக்கி இருப்பது வித்தியாசமான ஒன்று. பொதுவாக, திருவடிகளின் கீழே சனகாதி முனிவர்கள் சீடர்களாக இருப்பார்கள். இங்கு மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக உள்ளனர். ஆலமரம் குடை போல சர்ப்ப ரூபமாக விரிந்திருக்கிறது.
அழகான உற்சவ மூர்த்தி - பீடத்தில் யானை வணங்குவது போல் உள்ளது. வியாசர், கிருஷ்ணர், ஆதி சங்கரர் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். பாண லிங்கத்தை தரிசிக்கலாம்.
பத்துக் கரங்களுடன் பஞ்சமுக ஹேரம்ப கணபதி - கரங்களில் சக்திக்குரிய ஆயுதங்களுடனும், ஒற்றைத் தந்தமும் ஏந்தி, சிம்ம வாகனத்துடன் அற்புதமாக தரிசனம் தருகின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.