அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (மாதவரம்)

God Name : கைலாசநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

வியாஸ முனிவர் இங்கு தங்கி தவம் செய்ததால் மகாதவபுரம் எனப் பெயர்பெற்று, பின்னர் மருவி தற்போது மாதவரம் என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ளவர்கள் இதை ஈஸ்வரன் கோவில் என்றே கூறுகின்றனர். இது 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில். நந்திவர்மனால் கட்டப்பட்டது.
மூலவர்: கைலாசநாதர், அம்பாள்: கற்பகாம்பாள். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளி அருள் புரிகின்றார் கைலாசநாதர். மரகதத்தால் உருவான லிங்கம். பாலபிஷேகம் செய்யும்போது ஜோதியாக ஒளிர்கிறார். நாலரை அடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. பதினாறேகால் அடி சுற்றளவு கொண்ட பெரிய திருவுருவமாக கம்பீரமாக தரிசனம் தருகின்றார். சந்தன அலங்காரம். நெற்றியில் வெள்ளியினால் செய்த விபூதி பட்டைகள். சூரிய/சந்திர பிரபை என மேலும் அழகு சேர்க்க அலங்காரங்கள் செய்கின்றனர். அம்பாள் கற்பகாம்பாள் தனி சந்நிதி கொண்டுள்ளார். வலஞ்சுழி விநாயகர் மற்றும் சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக உள்ளன. மிகப் பெரிய நந்தி. 1. சோமநாதேஸ்வரர் (குஜராத்), 2. மல்லிகார்ஜுணர் (ஆந்திரா), 3. மாகாளேஸ்வரர் (உஜ்ஜைன்), 4. வைத்யநாதேஸ்வரர் (மகாராஷ்டிரா), 5. பீமநாதேஸ்வரர் (மகாராஷ்டிரா), 6. ராமநாதேஸ்வரர் (ராமேஸ்வரம்), 7. விஸ்வநாதேஸ்வரர் (வாரணாசி), 8. நாகநாதேஸ்வரர் (மகாராஷ்டிரா), 9. திரியம்பகேஸ்வரர் (மகாராஷ்டிரா), 10. கேதாரேஸ்வரர் (கேதார்நாத்), 11. கிருஷ்ணேஷ்வரர் (மகாராஷ்டிரா), 12. ஓம்காரேஷ்வரர் (மத்திய பிரதேசம்). பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களையும் இங்கு தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.