அருள்மிகு லவபுரீஸ்வரர் திருக்கோவில், விளாங்காடுபாக்கம்
God Name : லவபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
லவ - குசர்கள், ஸ்ரீ ராமர்தான் தந்தை என்று தெரியாமல் போரிட்டார்கள் அல்லவா? அந்த தோஷம் நீங்க, வால்மீகி முனிவரின் யோசனைப்படி, பிரதிஷ்டை செய்த 1008 லிங்கங்களில் இந்த மூலவரும் ஒன்று. லவன் வழிபட்ட லிங்கம் என்பதால் லவபுரீஸ்வரர் என்று பெயர். இங்குள்ள நாகலிங்கேஸ்வரரை வழிபடுவோர்க்கு கால சர்ப்ப தோஷம் நீங்குவதாக கூறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் லவபுரீஸ்வரர். ஸ்ரீ ராமரின் புதல்வனான லவன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் இது. அம்பாள் திரிபுரசுந்தரி தனி சந்நிதி கொண்டுள்ளார். பாதாள லிங்கம், பூத லிங்கம், காசி லிங்கம், கால பைரவர் ஆகிய மூர்த்தங்கள் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். விதானத்தில் சூரிய-சந்திர கிரகண காட்சி, கூர்மாவதாரம் போன்ற நிகழ்வுகளை அற்புதமாக வரைந்துள்ளனர். சிவன், அம்பாள், சூரியன், சண்டிகேஸ்வரர் ஆகியோரை தரிசித்து வந்தால், வலம் வந்த பாதை திரிசூல வடிவிலுள்ளது. விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், நாகலிங்கம், சரஸ்வதி, லட்சுமி, நாராயணன், நாராயணி, வள்ளி-தேவசேனா சமேத முருகன், பிரம்மா, துர்க்கை, நவக்கிரகங்கள், வைஷ்ணவி, பிராம்மணி, நந்தி தேவர் என்ற வரிசையில் தரிசித்து வந்து நின்றால் பிரதட்சிண பாதை 'ஓம்' எனும் வடிவில் இருக்கும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.