அருள்மிகு கொடியிடை அம்மன் திருக்கோயில், திருமுல்லைவாயில்
God Name : மாசிலாமணீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஸ்தல வரலாறு:
தொண்டைமான் எனும் அரசன், போருக்கு புறப்பட்டுப் போகும் வழியில், பாதையிலுள்ள முல்லைக் கொடிகள், தனது யானையின் கால்களில் சிக்குண்டதைக் கண்டு, அதை தனது வாளால் அப்புறப்படுத்தலானான். வாள் வெட்டுப்பட்ட இடத்தில் ரத்தம் கசியவே, கொடிகளை விலக்கிப் பார்த்தான். கொடிகளினூடே சிவலிங்கம் ஒன்று இருப்பதைப் பார்த்து, அதை வெளிக் கொணர்ந்து, பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பினான், என ஸ்தல வரலாறு.
சிவபெருமானின் கண்களைப் பொத்தியதால், சாபம் கொண்ட பார்வதி, இத்தலமருகே அமர்ந்து தவம் செய்யலானாள். அவளுடைய தவத்தில் மகிழ்ந்து பிரத்யட்சமானார். இத்தலத்தில் உன்னை வழிபடுவோர்க்கு - கிரியா சக்தி ஆகிய வீரம் கிடைக்கும் என வரமளித்தார்.
இவ்வாலயத்து எருக்கந் தூண்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, தவம் செய்து கொண்டிருந்த இரண்டு அசுரர்கள், அரசன் தொண்டைமானின் படைகளைத் துன்புறுத்தினர். கொடியிடை அம்மனிடம் வாள் பெற்று, அசுரர்களைக் கொன்றதாக வரலாறு.
ஆலயத்தின் முன்பாக, அமர்ந்த கோலத்தில் ஸ்ரீ மஹா கணபதி, மிகப் பெரிய திருவுருவம். கோபுரத்து சிற்பங்கள் அனைத்தும் பேரெழில் கொண்டுள்ளன.
கொடியிடை நாயகியின் மாலை வேளை தரிசனம் விசேஷம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் மாசிலாமணீஸ்வரர். சுயம்பு லிங்க ஸ்வரூபம். ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். மூலவரின் திருமேனியில் வெட்டுப்பட்ட தழும்பு காணப்படுகின்றது. லிங்கத் திருமேனிக்கு, வெள்ளியினால் உருவான நாகாபரணம் சாத்துகின்றனர். இவருக்கு பாசுபதேஸ்வரர், வெட்டு தாங்கி ஈஸ்வரர், நிர்மலமணீச்சரர் என்றெல்லாம் பெயர்கள் உண்டு.
மூலஸ்தானத்திற்கு வெளியேயுள்ள இரண்டு எருக்கந் தூண்களில், பித்தளை கவசம் பூட்டப்பட்டு, மழமழவென வைத்துள்ளனர். மூன்று இடங்களில் பூணப்பட்டுள்ளது.
சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளில் சந்தனக் காப்பில் ஜொலிக்கின்றார். முந்தைய சந்தனக்காப்பு களையப்பட்டதும், வெந்நீர் அபிஷேகம் செய்து, மீண்டும் சந்தனக் காப்பு செய்வார்கள்.
கொடியிடை அம்மன் கிரியா சக்தி ஸ்வரூபம். இடையை கொடி போல் வளைத்து நிற்பதால் கொடியிடை அம்மன் எனும் திருநாமம். லதா மத்யாம்பாள் எனப் போற்றுவர். இவள் வீரத்தின் அதிபதி. இவளுக்கு பச்சை நிறப் புடவை சாத்தி வழிபடுகின்றனர்.
கடம்பர் என்ற கொள்ளையர்களை அழிக்க புறப்படும் தோரணையில் நந்தியம்பெருமான் எதிர்புறமாகத் திரும்பி உள்ளார்.
பிரகார வலச்சுற்றில் வலம்புரி விநாயகர், லவ - குசன் வழிபட்ட குசலபுரீஸ்வரர், அழகிய பஞ்சமுக விநாயகர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பாதரஸ லிங்கம் ஒன்று தினமும் பூஜிக்கப்படுகின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.