அருள்மிகு வைஷ்ணவி அம்மன் திருக்கோவில் (திருமுல்லைவாயில்)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

இவ்வூரைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரிடம், ஒரு வியாபாரி ஒரு மூட்டையைக் கொடுத்துவிட்டுச் சென்றார். திரும்ப வந்து வாங்கிக்கொள்வதாகக் கூறிச் சென்றவர், திரும்ப வரவே இல்லை. வெகு காலம் வரை பொறுத்துப் பார்த்திருந்துவிட்டு, ஊர் மக்கள் முன்னிலையிலும், துரைசாமி ஐயர் என்ற மகான் முன்னிலையிலும், அந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்ததில் அதில் அழகான விக்ரஹம் இருக்கக் கண்டு, அதை பிரதிஷ்டை செய்து, நித்ய பூஜைகள் செய்து வந்தனர். அந்த விக்ரஹமே வைஷ்ணவி தேவி. பிரதிஷ்டை செய்த தினம் 23.10.1946 - ஒரு தீபாவளி தினத்தின் முந்தைய இரவு. பின்னர் இந்த ஆலயம் படிப்படியாக வளர்ந்தது என ஸ்தல வரலாறு கூறுகிறது. 108 சக்தி ஸ்தலங்களுள் 51வது சக்தி ஸ்தலமாக விளங்குவதால், ஐம்பத்தி ஓராம் ஊர் என அழைக்கப்பட்டு நாளடைவில் அம்பத்தூர் என்றானது.
நுழைவாசலின் இருபுறமும் சிறிய மாடங்களில் ஹயக்ரீவர், அகஸ்தியர் ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம். கிழக்கு வாசலில் வியாஸ விநாயகர் சந்நிதி கொண்டுள்ளார். வெள்ளை எருக்க வேரில் செதுக்கப்பட்ட திருவுருவம். மூலஸ்தானத்தில் அன்னை வைஷ்ணவி அபய - வரத ஹஸ்தங்களுடனும், முகத்தின் இருபுறம் விரிந்த கேசங்களுடனும், நேராக நிமிர்ந்திருக்கும் தோரணையில், சாந்த ஸ்வரூபியாக தரிசனம் தருகின்றாள். விசேஷ நாட்களில் சந்தனக் காப்பு சாத்தி, ரத்ன கிரீடம் - கவசம் அணிவித்து அலங்கார பூஷிதையாக அலங்கரிக்கின்றனர். நவதுர்க்கைகளுள் ஒன்றான வைஷ்ணவி தேவியின் முகம் - சிவனின் அம்சம், திருவடிகள் - நான்முகனின் அம்சம், கண்கள் - அக்னியின் அம்சம், காதுகள் - வாயுவின் அம்சம் எனக் கூறுவர். சிவபெருமானின் சூலம், திருமாலின் சக்கரம் இவைகளை ஆயுதமாகக் கொண்டவள். மூலஸ்தானத்தில் வைஷ்ணவியின் இடது பக்கம் தங்கமுலாம் பூசிய பஞ்சலோக விக்ரஹமாக மீனாட்சி அம்மனும், பீடத்தில், அர்த்தமேரு-ஸ்ரீசக்கரத்துடன் காமாட்சியின் உற்சவ விக்ரஹமும் தரிசிக்கலாம். பீடத்தின் இருபுறமும் சித்தி விநாயகரும், பாலசுப்ரமண்யரும், சங்கநிதி - பதுமநிதி திருவுருவங்களும் காணலாம். கோஷ்டத்தில் மகேஸ்வரி, நாராயணி, ப்ராம்மி ஆகிய திருவுருவங்களைக் காணலாம். சலவைக் கல்லால் உருவான ஆஞ்சநேயரும், பஞ்சலோக படிமமான ஷண்முகரும் தரிசிக்கலாம். உட்புறத்தில் அபிஷேக தீர்த்தக் கிணறும், முதலை மீது வீற்றிருக்கும் உலோமப் படிமம் ஒன்றும் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.