அருள்மிகு சந்தான ஸ்ரீநிவாசர் திருக்கோயில் (முகப்பேர்)
God Name : ஸ்ரீ சந்தான ஸ்ரீநிவாசர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலவர்: ஸ்ரீ சந்தான ஸ்ரீநிவாசர், தாயார்: ஸ்ரீ சந்தான லட்சுமி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ சந்தான ஸ்ரீநிவாசர் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஒன்பதரை அடி உயரம் கொண்ட ஆஜானுபாகுவான திருமேனியுடன், கம்பீரமாக நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். அபய - வரத ஹஸ்தங்கள், சங்கு-சக்கரம் கொண்ட சதுர்புஜங்களுடன் காட்சி தருகின்றார். அவரது திருமார்பில் ஆதிலட்சுமி, ஸ்ரீ தேவி - பூதேவி ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
உற்சவர் சந்தான ஸ்ரீநிவாசர் கொள்ளை அழகுடன் விளங்கும் விக்ரஹம். வரப்பிரசாதியான சந்தான கிருஷ்ணனை மடியில் வைத்துக் கொண்டு, பிரார்த்தனை செய்யும் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிட்டுகிறது. தாயார் சந்தான லட்சுமிக்கு தனி சந்நிதி உள்ளது.
வலம்புரியுடன் விளங்கும் சர்வசக்தி விநாயகர், ஆஞ்சநேயர், ஐயப்பன், நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
காலை சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், தோமாலை, ஸ்ரீ பாத சேவை எனத் தொடங்கி, இரவு ஏகாந்த சேவை வரை சேவிக்கலாம்.
புனர்பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீ ராமருக்கு, திருவோண நட்சத்திரத்தன்று விஷ்ணுவுக்கு, ஸ்வாதி நட்சத்திரத்தன்று லட்சுமி நரசிம்மருக்கு, ரேவதி நட்சத்திரத்தன்று சந்தான ஸ்ரீநிவாசனுக்கு, பௌர்ணமியன்று பொது என விசேஷ சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.