அருள்மிகு பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோவில், திண்ணனூர்

God Name : மூலவர்: பக்தவத்ஸலப் பெருமாள்் உற்சவர்: பத்ராவிப் பெருமாள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

திருமாலுடன் ஏற்பட்ட ஊடலால், அவரையும் வைகுந்தத்தையும் பிரிந்த மஹாலட்சுமி பூலோகம் வந்து, இவ்வூரிலுள்ள துளசி வனத்தில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். மருமகனுக்காக மகளைத் தேடி பூவுலகில் அலைந்த சமுத்ரராஜன், இங்குள்ள துளசி வனத்தில் அவளைக் கண்டுபிடித்து, வைகுந்தம் வரச்சொல்லி அழைக்கிறார். அவள் வருவதாக இல்லை. வைகுந்தம் சென்று திருமாலை வேண்டுகிறார். மாமனாரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, திருமால் இங்கு வந்து, லட்சுமியை அழைத்துச் செல்கின்றார். திருவாகிய லட்சுமி இங்கு தங்கி தவம் இருந்ததால் இவ்வூர் திருநின்றவூர் எனப் பெயர் கொண்டது. 'என்னை பெற்ற தாயார்' ஆகிய சுதாவல்லியை குபேரன் வழிபட்டு, இழந்த தன் செல்வங்களை மீண்டும் அடைந்தார். இதனால் தாயாரை 'வைபவலட்சுமி' என்று போற்றுவார்கள். கல்யாணக் கோலத்தில் சமுத்ரராஜனுக்குக் காட்சி தந்த பெருமாள், சமுத்ரராஜனின் பிரார்த்தனைக்கு இணங்க, தாயாரை 'என்னை பெற்ற தாய்' என்று வணங்கப்படுவாள் என ஆசி கூறினார். திருமங்கை ஆழ்வார் தனது திவ்யதேச யாத்திரையின்போது இத்தலத்திற்கு வந்தார். பெருமாள் அவருக்குக் காட்சி தராமல் பாராமுகமாய் இருந்துவிட்டார். ஆழ்வாரும் இத்திருப்பதியைக் கடந்து சென்றுவிட்டார். ஆழ்வாரின் வருத்தத்தைத் தாயார் பெருமாளிடம் எடுத்துக் கூறினார். உடனே பெருமாள் ஆழ்வாரைத் தேடி திருக்கடல்மல்லை வந்து, அங்கு சேவை சாதித்து, தனக்கு ஒரு பாசுரம் பிரசாதிக்கும்படி வேண்டினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. 'நின்றவூர் நித்திலத்தை' எனத் தொடங்கிப் பாடி மங்களாசாஸனம் செய்தார் ஆழ்வார். அதாவது, 'முத்துக்கு ஒப்பானவர்' எனத் தொடங்கிப் பாடுகிறார். இது ஸ்ரீநிவாச க்ஷேத்ரம் எனப் போற்றப்படுகிறது. இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: பக்தவத்ஸலப் பெருமாள்் உற்சவர்: பத்ராவிப் பெருமாள்் தாயார்: சுதாவல்லி. மூலஸ்தானத்தில் பக்தவத்ஸலப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சமுத்ர ராஜனுக்கும், வருணனுக்கும் பிரத்யட்சமானதாக ஐதீகம். ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் உடன் உள்ளனர். ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்களுடன் சேவை சாதிக்கும் உற்சவப் பெருமாள் விக்ரஹம் பேரழகுடன் இருக்கின்றது. பக்தர்களின் உயிருக்கு உயிராய் இருப்பவர் என்பதால், பத்ராவிப்பெருமாள் எனப் போற்றுகின்றனர். ராமர் சந்நிதியில், ராம-லக்ஷ்மணர்களை தோளில் தாங்கி நிற்கும் ஹனுமன், இலங்கினியை காலால் உதைத்து வதம் செய்யும் தோரணையில் தரிசனம் தருவது வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒன்று. சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், ஆழ்வாராதிகள், ஸ்ரீ ராமாநுஜர், மணவாள மாமுனி ஆகியோரை தனித்தனி சந்நிதிகளில் சேவிக்கலாம். சுதாவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். 'என்னை பெற்றத் தாயார்' என்ற திருநாமமும் உண்டு. கோவிலின் எதிரே மேற்கு நோக்கி ஆஞ்சநேயர் சந்நிதி இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.