அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோவில் (திண்ணனூர்)

God Name : மூலவர்: இருதயாலீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

பல்லவ மன்னன் ராஜசிம்மன், காஞ்சி மாநகரில் கைலாசநாதர் கோவிலைக் கட்டி, கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்து, அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தான். மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், தாம் பூசலார் கட்டும் கோவிலைக் காண திருநின்றவூர் செல்ல இருப்பதாகவும், கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை வேறு தினத்திற்கு மாற்றும்படியும் கூறினார். ஆவல் மேலிட, மன்னனும் திருநின்றவூர் வந்து சேர்ந்தான். அங்கு, ஆலயம் எதுவும் கட்டப்பட்டதாகவோ, கும்பாபிஷேகம் நடக்கவிருப்பதாகவோ, எந்த அறிகுறியும் இல்லை. இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, மனசுக்குள்ளேயே ஒரு கோவிலைக் கட்டும் பூசலார், ஒவ்வொரு சந்நிதியும் எப்படி அமைய வேண்டும், மூர்த்தங்களை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று மனசில் நிறுத்தி, மூலவரையும் பிரதிஷ்டை செய்து, இருதயாலீஸ்வரர் என்று நாமகரணமும் சூட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார். பூசலாரையே தேடிக் கண்டுபிடித்த மன்னன், அவர் கட்டும் கோவிலைக் காட்டுமாறு வேண்டினான். "இதோ இங்கே" என, தனது ஹிருதயத்தைத் திறந்து காட்டினார் பூசலார். பூசலாரின் பக்தியைக் கண்டு மன்னன் நெகிழ்ந்து போனான். அன்பால் கட்டப்பட்ட மானசக் கோவிலை, பூசலார் மனசுக்குள் நிர்மாணித்தபடி, மன்னனே தனது செலவில் கட்டித் தந்து விட்டான். காலம் முழுவதும் இறைவன் சிந்தனையிலேயே கழித்துவிட்டு சிவபதவி அடைந்தார் பூசலார். (இறைவன்) இருதயத்தில் எழுந்தருளிய (தலம்). தேவார வைப்புத்தலம்.
மூலவர்: இருதயாலீஸ்வரர், அம்பாள்: மரகதாம்பிகை. மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள இருதயாலீஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபமானவர். சதுர ஆவுடையாருடன் கூடிய அழகிய லிங்கத் திருமேனி. ஹிருதயம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ள மூலஸ்தானம். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான பூசலார், இறைவனுடன் காணப்படுகிறார். சந்நிதியின் பின்புறம் சங்கு-சக்கரதாரியான திருமாலை சேவிக்கலாம். அம்பாள் மரகதாம்பிகை, தெற்கு நோக்கி தனி சந்நிதி கொண்டுள்ளார். பொல்லாப் பிள்ளையார், லட்சுமி கணபதி, வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான் மற்றும் கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. கஜப்பிருஷ்ட விமானமும், தூங்கானை மாட அமைப்பும், ஹிருதய வடிவில் கருவறையும் கொண்ட கோவில்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.