அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் (சித்தர்காடு)
God Name : சுந்தரராஜப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
பிராண தீபிகா சித்தர், கருடக்கொடி சித்தர், படுக்கை சித்தர் ஆகியோர் தவம் மேற்கொண்ட ஸ்தலம் என்பதால் சித்தர்காடு எனப் பெயருற்றது.
மூலவர்: சுந்தரராஜப் பெருமாள், தாயார்: சுந்தரவல்லி.
மூலஸ்தானத்தில் மூலவராக சுந்தரராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
மூலவரின் திருமார்பு வரை உயர்த்தப்பட்ட வெண்திரையை பின்னணியாகக் கொண்டு உற்சவ மூர்த்தங்கள் உள்ளன. ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சுந்தரராஜர், அச்சுதன், அனந்தன் ஆகிய உற்சவ மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன.
வலதுபுறமாக உள்ள தனி சந்நிதியில் நவநீத கிருஷ்ணன் சேவை சாதிக்கின்றார். ஆதிசேஷனின் விரிந்த படத்தின் நடுவே, குழந்தை உருவில் தரிசனம் தருகின்றார். குழந்தைப்பேறு வேண்டுவோர்கள் இவரை பிரார்த்திக்கின்றனர்.
தாயார் சுந்தரவல்லி, பெயருக்கேற்றார் போல அழகே உருவாக காட்சி தருகின்றார்.
இடதுபுறம் உள்ள ஆண்டாள் சந்நிதியின் தூண் ஒன்றில் கருடக்கொடி சித்தரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. இவரை வழிபட்டால், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலுவதாக நம்பிக்கை. இவருக்கு தைலக்காப்பு திருமஞ்சனம் செய்து சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால், பார்வை போய்விடும் என்ற கடைசி நிலையில் உள்ளவர்களும் குணமடைவதாக பட்டாச்சார்யார் தெரிவிக்கின்றார்.
கிளிகள் நிறைய குடிகொண்டுள்ள ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.