அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோவில், திருமழிசை
God Name : ஒத்தாண்டேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
வேண்டுபவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் மன அனுகூலம் கொண்டவராதலால் மனானுகூலேஸ்வரர் என்றும், பக்தர்களின் மனதோடு ஒத்துப் போய் ஆட்கொள்வதால் ஒத்தாண்டேஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார்.
கரிகால சோழன் இவ்வூர் வழியே தனது யானை மீது செல்கையில், காட்டுக் கொடிகளில் யானையின் கால் சிக்குண்டு, நடக்க முடியாமல் நின்றது. கொடிகளிலிருந்து சிக்குண்ட யானையின் காலை விடுவிக்க, தனது வாளால் கொடிகளை வெட்டலானான் சோழன்.
வெட்டுண்ட கொடிகளிலிருந்து ரத்தம் பீறிடவே, கொடிகளை விலக்கிப் பார்த்தான் அரசன். கொடிகளினிடையே ஒரு சிவலிங்கம் இருப்பதையும் அதிலிருந்து ரத்தம் வருவதையும் பார்த்தான்.
சிவ அபச்சாரம் செய்து விட்டோமே என்று கலங்கிய மன்னன், தனது கைகளை வெட்டிக் கொள்ள முற்பட்டான். வாளால் கைகளை வெட்டிக் கொண்டதும், அங்கு பிரத்யட்சமான சிவபெருமான், புதைந்துக் கிடக்கும் லிங்கத்தை வெளிப்படுத்த நடந்த நிகழ்ச்சியே இது எனக் கூறி, வெட்டுண்ட கைகளை திரும்ப தந்தார். இதனால் 'கை தந்த பிரான்' எனப் பெயர் கொண்டார்.
மூலவர்: ஒத்தாண்டேஸ்வரர், அம்பாள்: சீதளாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி தரிசனம் தருகின்றார் ஒத்தாண்டேஸ்வரர். அழகிய தேஜோமய லிங்கம். இவருக்கு மனோனுகூலேஸ்வரர், கை தந்த பிரான், அகத்தீசர் என்றெல்லாம் பெயர்கள் உண்டு.
லிங்கத்தின் பின்புறம், திருமணக் கோலத்தை அகஸ்தியருக்கு காண்பித்த காட்சி சுதை வடிவமாக காணப்படுகிறது. திருமணம் முடிந்தபின் தம்பதி சமேதரராய் அமர்ந்திருக்கும் வரதானக் கோலத்தில் காட்சி தரும் கல்யாணசுந்தரர்.
தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் சீதளாம்பிகை நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். இவளுக்கு குளிர்ந்த நாயகி என்ற பெயரும் உண்டு.
ப்ரஸன்ன விநாயகர், தேவராஜ கணபதி, வள்ளி-தெய்வயானை உடனாய சிவசுப்ரமண்யர், வீரபாகு தேவர், புலஸ்தியர் வழிபட்ட கங்காதர ஈஸ்வரர், பர்வதவர்த்தினி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
சிவகாமசுந்தரியை சற்று முகம் சாய்த்து பார்க்கும் பாவனையில் உள்ள நடராஜப் பெருமான், ரிஷபநாயகர், அதிகாரநந்தி ஆகியோரின் திருவுருவங்கள் அழகாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.