அருள்மிகு ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோவில், திருமழிசை.
God Name : மத்யம ஜெகந்நாதப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மஹிசார க்ஷேத்ரம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் பிரம்மாவுக்கு ப்ரத்யட்சமான பெருமாள், ப்ருகு, மார்க்கண்டேய ரிஷிகளுக்கு பிரம்மா துலாபாரம் காட்டி இத்தலத்தைப் பற்றி எடுத்து கூற வைத்தாராம். ப்ருகு முனிவர் இத்தலத்து குளக்கரை ஓரம் அமர்ந்து தவம் செய்து வழிபட்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த குளத்தை ப்ருகு புஷ்கரிணி என்று அழைக்கின்றனர். பல அரிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிங்க வடிவம் கொண்ட அர்த்தமண்டபம் பல்லவ மன்னனால் கட்டப்பட்டது என்பர்.
மூலவர்: மத்யம ஜெகந்நாதப் பெருமாள், தாயார்: திருமங்கைவல்லி. மூலஸ்தானத்தில் மூலவராக ஜெகந்நாதப்பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அழகான திருமேனி கொண்டுள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். தாயாராக திருமங்கைவல்லி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள விநய ஆஞ்சநேயர் மிகுந்த வரப்பிரசாதி. அழகிய ஸ்ருங்கர், மணவாள மாமுனி, வைஷ்ணவி ஆகியோரை சேவிக்கலாம். திருமழிசை ஆழ்வார் அவதரித்த ஸ்தலம். திருமழிசை ஆழ்வாருக்கு சந்நிதி இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.