அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேற்காடு
God Name : வேதபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஸ்தல வரலாறு: பிரளயம் முடிந்ததும், முதலில் வெள்ளத்தை வற்றச் செய்து, நான்கு வேதங்களையும் இத்தலத்தில் வெள்வேல் மரங்களாக வடிவெடுக்கும்படி பணித்தார் இறைவன். அதன்படி வேதங்கள் நான்கும் வெள்வேல் மரங்களாக நின்று, இவ்விறைவனை வழிபட்டன. இதனால் இவ்விறைவனுக்கு வேதபுரீஸ்வரர் என்று பெயர். திருமால் தான் தவறவிட்ட வலம்புரி சங்கை இவ்விறைவனை வழிபட்டு பெற்றார். பிரம்மனை சிறை பிடித்த தோஷம் விலக, முருகப்பெருமான் வழிபட்ட ஸ்தலம். ப்ருகு முனிவரின் சாபம் கொண்ட திருமால், ஜமதக்னி-ரேணுகை தம்பதியினருக்கு மகனாக பிறந்து பரசுராமராக வளர்ந்து, இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டுள்ளார். 63 நாயன்மார்களுள் மூர்க்க நாயனார் அவதரித்த ஸ்தலம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் வேதபுரீஸ்வரர். வட்ட வடிவ ஆவுடையார். கம்பீரமான தோற்றம். சுயம்பு மூர்த்தம். ஐந்து தலை நாகம் குடை பிடிக்கின்றது. கிழக்கு பார்த்த சந்நிதி. இவருக்கு வேற்காட்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. சிவலிங்கத் திருமேனிக்கு பின்னால் காட்சி தருகின்றனர். அகஸ்தியருக்கு திருமணக்கோலம் காட்டியதாக ஐதீகம். வினை தீர்க்கும் விநாயகர் உடன் எழுந்தருளியுள்ளார். கருவறையை நோக்கி கோடிசூரியனும், அருகே அகஸ்தியரும் காணப்படுகின்றனர். வேதபுரீஸ்வரரை சுற்றிலும் - அக்னி, யம, ந்ருதி, வருண, வாயு, குபேர, இந்திர லிங்கங்கள் உள்ளன. வெள்வேல் மரத்தடியில் முருகன் பூஜித்த லிங்கத்தை காணலாம். அன்னை பாலாம்பிகை மிகுந்த வரப்பிரசாதி. வெட்கத்தில் முகம் சாய்த்த கோலத்தில் வீற்றிருக்கின்றாள். முருகனுக்கு வேல் தந்து ஆசிர்வதித்ததால் வேல் நெடுங்கண்ணி என்றும் அழைப்பர். பிரகார வலச்சுற்றில் தூண் ஒன்றில் 'கருமாரியின் வடிவம்' மழு உருவமாக காணப்படுகிறது. ஞானசம்பந்தருக்கு காட்சி அளித்ததாக கூறப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.