அருள்மிகு வைத்தீஸ்வரன் திருக்கோயில் (பூவிருந்தவல்லி)

God Name : மூலவர்: வைத்தீஸ்வரன். சிறப்பு மூர்த்தம்: அங்காரகன்.

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

மூலவர்: வைத்தீஸ்வரன், அம்பாள்: தையல்நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் வைத்தீஸ்வரன். அழகிய தேஜோமய லிங்கம். கிழக்கு பார்த்த சந்நிதி. அங்காரகன் வழிபட்ட இறைவன். மாசி மாதம் 21 முதல் 25 வரை சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள், லிங்கத் திருமேனியில் படர்ந்து பூஜை செய்வது கண் கொள்ளா காட்சி. கருவறையின் வெளியே அங்காரகனின் பாதங்களை தரிசிக்கலாம். இவ்வாலயம் செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் தையல்நாயகி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். உட்பிரகாரத்தில் வள்ளி-தெய்வயானை உடனாய முத்துக்குமாரஸ்வாமி எழுந்தருளி தரிசனம் தருகின்றார். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட - ஸ்ரீ சக்கரம், சுப்ரமண்ய சக்கரம், ஷண்முக சக்கரம் ஆகியன தரிசிக்கலாம். கோஷ்ட மூர்த்தங்கள், வலச்சுற்றிலுள்ள பரிவார தேவதைகள், வழித்துணை விநாயகர், அழகு விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். விடுதலைச் சனி மிகுந்த வரப்ரசாதியாக திகழ்கின்றார். எதிரே நள தமயந்தி திருவுருவங்கள். கோயிலைச் சுற்றிலும் சிறிய படிக்கட்டுகள் - லட்ச தீபம் ஏற்றுவதற்கு வசதியாக வைத்துள்ளனர். உத்தர வைத்தீஸ்வரன் கோயில் - சென்னையிலுள்ள நவகிரக கோயில்களுள் (ஒன்று) - செவ்வாய்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.