அருள்மிகு கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (காலடிப்பேட்டை)

God Name : ஸ்ரீ கல்யாண வரதராஜர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

ஸ்தல வரலாறு: 1717 - 1719 ல் கெல்லட பிரபு எனும் ஆங்கிலேயர், கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னராக இருந்தார். அவரிடம் துபாஷ் ராகவாச்சார்யார் என்பவர் காரியதரிசியாக பணி புரிந்து வந்தார். அவர் தினமும் காஞ்சிக்கு சென்று வரதராஜரை சேவித்த பின்னரே அலுவலகம் செல்லும் சம்ப்ரதாயத்தை வைத்திருந்தார். அதற்காக அவருக்கு அனுமதியும், குதிரை சாரட்டு வண்டியும் வழங்கப்பட்டிருந்தது. இவர் அடிக்கடி காஞ்சிக்கு போவதால், அவரது பக்தியின் ஆழத்தை சோதிக்க எண்ணிய கெல்லட் பிரபு, ஒரு நாள் அவரை அழைத்து "இந்த க்ஷணத்தில் காஞ்சியில் என்ன நடக்கிறது?" என வினவினான். "தற்போது வரதராஜரின் தேர் பவனி வருகையில் சேற்றில் மாட்டிக் கொண்டது" என்றார் ராகவாச்சார்யார். அந்த நிகழ்வு உண்மை என அறிந்து கொண்டதாலும், அவரது பக்தியின் ஆழத்தை புரிந்து கொண்டதாலும், அவரது பணியில் மகிழ்ச்சியுற்றதாலும் அவர் வாழும் பகுதியிலேயே அவருக்கு பரிசாக, வரதராஜர் கோவிலை கட்டிக் கொடுத்தார் கவர்னர். "காஞ்சியில் உள்ளது போலவே உற்சவப் பெருமாளும் வேண்டும்" என கோரிக்கை வைத்தார். அதையும் நிறைவேற்றினார் கெல்லட் பிரபு என ஸ்தல வரலாறு. காலட்பேட் என்று கவர்னர் பெயரால் அழைக்கப்பட்டிருந்த ஊர், பின்னர் மருவி காலடிப்பேட்டை என்றானதாக கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கல்யாண வரதராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சங்கு-சக்கரம், அபய-கடிகை கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் சஹிதமாக உற்சவ வரதராஜர் சேவை சாதிக்கின்றார். பேரெழில் கொண்ட விக்ரஹங்கள். பெருமாளுக்கு எதிரே பெரிய திருவடியை காணலாம். தாயார் ஸ்ரீ பெருந்தேவி தனி சந்நிதி கொண்டு அருள் புரிகின்றார். சக்கரத்தாழ்வார்/யோக நரசிம்மர், கோதண்டராமர், பக்த ஆஞ்சநேயர், ஆழ்வாராதிகள், உடையார், மணவாள மாமுனி, மற்றும் நவகிரகங்கள் சந்நிதி கொண்டுள்ளனர். தாமரை பீடத்தில் கிரகங்கள் காட்சி தருகின்றனர். முகப்பில் கிருஷ்ணர் ஸ்தம்பம் காணலாம். மூலவர் முன்பாக கோமாதா நிறுத்தப்பட்டு அதிகாலையில் நடக்கும் விஸ்வரூப சேவை, சேவிக்க ஆனந்தம் பெருகுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.