அருள்மிகு கும்மாளம்மன் திருக்கோவில், தண்டையார்பேட்டை
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
பிரதான கருவறையில் மூலவரான கும்மாளம்மன் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள். அன்னை பராசக்தியின் அம்சமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். உடுக்கை, கத்தி, சூலம், கபாலம் ஆகியன ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் கூடிய அழகான திருவுருவம். மகிழ்ச்சி பொங்கும் திருமுகம். வடமொழியில் சந்தோஷி மாதா என்று போற்றுகின்றனர். சிரசு மட்டும் தனியாக தரிசனம் தரும் அம்மனையும் காணலாம். கல்லில் உருவான நாகம் குடை பிடிக்க காட்சி தருகிறாள். கருவறையின் இரண்டு பக்கங்களிலும் கணபதியும் பாலமுருகனும் எழுந்தருளியுள்ளனர். கோஷ்டத்தில் மஹாலட்சுமி, காளிகாம்பாள், வலம்புரி விநாயகர், வீர ஆஞ்சநேயர் ஆகியோரை தரிசிக்கலாம். தெற்கு பார்த்து எழுந்தருளியுள்ள பஞ்சமுக விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி என்பார்கள். பிரகார வலச்சுற்றின் வலது புறமாக பால முனீஸ்வரர், வாராஹி, திருவக்கரை வக்ரகாளி, பக்த ஆஞ்சநேயர், சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, தாயாருடன் இருக்கும் வெங்கடேசப் பெருமாள், பிரத்யங்கிரா தேவி மற்றும் காசி விஸ்வநாதர் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். கருவறையின் பின்புறமாக ஐயப்பன், காமாட்சி, கரு காத்த அம்மன், புற்றும் புற்று மேடையுடனும் உள்ள வேப்ப மரம், நாகவல்லி அம்மன் ஆகிய தரிசனங்கள். பிரகார வலச்சுற்றின் இடது புறமாக சிந்தலக்கரை வெக்காளியம்மன், துர்க்கை, நாகசக்தி, ராகவேந்திரர், சஞ்சீவி ஆஞ்சநேயர், ஷீரடி சாயிபாபா மற்றும் வேணுகோபாலஸ்வாமி ஆகியோரை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.