அருள்மிகு ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி திருக்கோவில் (முத்யால்பேட்)
God Name : ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். மேற் கரங்களில் சங்கு-சக்கரம் கொண்டும், கீழ்க் கரங்களில் புல்லாங்குழல் ஏந்தி அதை வாசிக்கும் பாவனையிலும் காட்சி தருகிறார். அழகிய பசு காணப்படுகிறது. ருக்மணி-சத்யபாமா தேவியர்கள் உடன் காட்சி தருகின்றனர். உற்சவ மூர்த்திகளாக ருக்மணி-சத்யபாமா சகித கண்ணன் ஆகியோரைக் காணலாம். தனிக்கோவில் தாயாராக ருக்மணி தேவி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். மூலவராகவும், உற்சவராகவும் சேவை சாதிக்கிறார். திருமணத்தடை நீக்கும் வரப்பிரசாதியாக இருப்பதால் இவரது திருவடிகளில் ஜாதகத்தை வைத்து பூஜிக்கின்றனர். ஸ்ரீ தேவி - பூதேவி சகிதம் மூலவராகவும் உற்சவராகவும் ஸ்ரீநிவாசப் பெருமாள் காட்சி தருகிறார். ஸ்ரீராமர்-சீதா தேவி-லக்ஷ்மணர் ஆகியோர் ஓர் சந்நிதியிலும், எதிரேயுள்ள சந்நிதியில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். கிருஷ்ணன் சந்நிதிக்கும் தாயார் சந்நிதிக்கும் இடையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை சேவிக்கலாம். ஸ்ரீ ஆண்டாள் மூலவராகவும், கிளியுடன் கூடிய உற்சவராகவும் காணப்படுகிறார். ஆழ்வார்களின் சந்நிதி ஸ்ரீ கிருஷ்ணர் சந்நிதிக்கு வலப்புறமாக உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.