அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (சௌகார்பேட்டை)
God Name : ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மும்பையிலுள்ள பனஸ்வாடி கோவிலைப் போன்ற அமைப்பிலேயே இருந்தாலும், மூலவர் திருமலையை நினைவுபடுத்துகிறார். பைராகி மடம் மற்றும் இக்கோவிலை மஹந்த் லால்தாஸ் என்பவர் ஸ்தாபித்தார் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஆறடி உயரமுள்ள அழகிய திருமேனி. சங்கு-சக்கரதாரியாக காட்சி தருகிறார். திருமார்பில் ஸ்வர்ணலட்சுமி மற்றும் 108 சாளக்ராம மாலை அலங்கரிக்க சர்வாலங்காரத்துடன் காணப்படுகிறார். திருமலையில் தரிசிப்பது போலவே உள்ளது. ஸ்ரீ தேவி - பூ தேவி தேவியர்கள் உடனாய உற்சவ ஸ்ரீநிவாசரின் அழகிய திருவுருவம் மனசிலேயே நிற்கிறது. பிரகாரத்தில் தனிக் கோவில் கொண்டுள்ளார் அலர்மேல் மங்கைத் தாயார். உற்சவத் தாயார் அலர்மேல் மங்கை அழகாக இருக்கின்றார். உற்சவத் தாயார் சிலைக்கு மூக்குத்தி போடும் அளவுக்கு நுண்ணியமாக வடித்துள்ளனர். ஸ்ரீ தேவி - பூ தேவி தேவியர்களுடனாய வரதராஜர், ஸ்ரீ ரங்கநாதர், திருமலைவாசப் பெருமாள் ஆகிய மூவரையும் ஒருசேர சேவிக்கும் பாக்யம் கிட்டுகிறது. பூரி ஜெகந்நாதர், வராஹப் பெருமாள், ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர் - சீதாப்பிராட்டி, ராமபக்த ஹனுமன், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ தேவி - பூ தேவி சகித வேணுகோபாலன் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். யந்திர ரட்சையுடன் எழுந்தருளியிருக்கும் லட்சுமி நரசிம்மர் உக்ர கோலத்தில் காட்சி தருகின்றார். அவரது விழிகள் நம்மை ஊடுருவிப் பார்க்கும் விதத்தில் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.